வைரல்

பாராசூட்டின் கயிறு அறுந்து நடுக்கடலில் விழுந்த தம்பதி.. வெளியான அதிர்ச்சி வீடியோ: நடந்தது என்ன?

பாராசைலிங் செய்த போது பாராசூட்டின் கயிறு அறுந்து தம்பதியினர் கடலில் விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாராசூட்டின் கயிறு அறுந்து நடுக்கடலில் விழுந்த தம்பதி.. வெளியான அதிர்ச்சி வீடியோ: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜித் கதாத். இவரது மனைவி சர்லா கதாத். இந்த தம்பதி தனது நண்பர்களுடன் சேர்ந்து டையூவில் உள்ள நாகோவா கடற்கரைக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, அஜித் மற்றும் சர்லா தம்பதியினர் படகு மூலம் நடுக்கடலுக்குச் சென்று பாராசைலிங் ஈடுபட்டனர். படகில் கயிறு கட்டி பாராசூட்டில் உயர உயர பரந்து கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்து அவர்களின் உறவினர்களும், நண்பர்களும் வீடியோ எடுத்து மகிழ்ச்சியாக இருந்தனர். அப்போது திடீரென பாராசூட்டின் கயிறு அறுந்ததைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், பாராசூட்டின் கயிறு அறுந்ததை அடுத்து அந்த தம்பதி நடுக்கடலில் விழுந்தனர். உடனே கடலோ காவல்படையினர் அவர்கள் விழுந்த பகுதிக்குச் சென்று பத்திரமாக மீட்டனர். அவர்கள் லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து அஜித் கதாத் கூறுகையில், “பாராசூட்டின் கயிறு அறுந்த சில நிமிடத்திலேயே நாங்கள் இருவரும் கடலில் விழுந்தோம். லைப் ஜாக்கெட்டுகள் அணிந்திருந்ததால் கடலில் மிதந்து கொண்டிருந்தோம். என் மனைவி அதிர்ச்சியில் இருந்தார். நாங்கள் இருவரும் சில நிமிடங்கள் எங்களால் பேச முடியவில்லை. பின்னர் உடனே எங்களை பத்திரமாக மீட்டனர்” என தெரிவித்துள்ளார்.

“பலத்த காற்று வீசியதால் இந்த சம்பவம் நடந்துள்ளது என்றும் கடந்த மூன்று ஆண்டுகளில் இப்படி நடைபெறுவது இதுவே முதல் முறை” என்று பாராசைலிங் உரிமையாளர் தெரிவித்துள்ளார். பாராசைலிங்கின் போது பாராசூட்டின் கயிறு அறுந்து தம்பதிகள் கடலில் விழும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories