வைரல்

“லம்போகினி காரை விற்பனைக்கு கொடுத்த விராட் கோலி” : கேரளாவிற்கு குவியும் டீலர்கள் - விலை என்ன தெரியுமா?

விராட் கோலி வாங்கிய லம்போகினி காரை விற்பனைக்காக கொச்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

“லம்போகினி காரை விற்பனைக்கு கொடுத்த விராட் கோலி” : கேரளாவிற்கு குவியும் டீலர்கள் - விலை என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஒரு கார் பிரியர் என அவரே ஒரு பேட்டியின் போது கூறியிருந்தார். கடந்த 2015ம் ஆண்டு விராட் கோலி வாங்கிய லம்போகினி காரை விற்பனைக்காக கொச்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆரஞ்சு நிற ஆடம்பர லம்போகினி சொகுசு காரை ரூ.1.35 கோடிக்கு விற்கப்போவதாக விற்பனை நிறுவனம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட இந்த கார் கொச்சினில் உள்ள ராயல் ட்ரைவ் என்ற பழைய ஆடம்பர கார் வாங்கி விற்பனை செய்யும் டீலர் ஷோரூமிற்கு விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த கார் குறித்து தகவல் அம்மாநில விராட் கோலி ரசிகர்களிடையே பரவியதைத் தொடர்ந்து பலரும், நேரில் பார்க்கக் குவிந்துவருவதாக ஷோரூன் ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கார் குறித்து ஷோரூம் ஊழியர் கூறுகையில், “இந்த கார் 2013ம் ஆண்டு மாடல். இதனை விராட் கோலி வெறும் 10,000 கிலோ மீட்டர் வரைத் தான் ஓட்டியுள்ளார். இந்த கார் ஸ்டார்ட் ஆகி 4 விநாடிகளிலேயே 100 கி.மீ வேகத்தில் செல்லும். சுமார் 324 கிமீ வேகம் வரை செல்லக்கூடியதுதான் இந்த லம்போகினி” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories