வைரல்

“டைனோசருக்கு உணவாக இருந்த பழமை வாய்ந்த தாவரம் உதகையில் பராமரிப்பு” : GINKGO BILOBA குறித்த சிறப்பு செய்தி

டைனோசர் விலங்குகளுக்கு உணவாக இருந்த GINKGO BILOBA என்ற 200 லட்சம் பழமைவாய்ந்த தாவரம் உதகை தாவரவியல் பூங்காவில் பராமரிக்கப்படுகிறது.

“டைனோசருக்கு உணவாக இருந்த பழமை வாய்ந்த தாவரம் உதகையில் பராமரிப்பு” : GINKGO BILOBA குறித்த சிறப்பு செய்தி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகத்தில் தாவரம் வகைகளில் இரண்டு வகைகள் உள்ளன. அதில் ஒன்று பூக்கும் தாவரம். இரண்டாவது பூக்கா தாவரமாகும். பொதுவாக தாவர இனங்களில் பூக்கும் தாவரங்கள் வேகமாக வளர்ந்து குறிப்பிட்ட காலங்களில் அழிந்துவிடும்.

ஆனால், பூக்காத தாவரங்கள் மெதுவாக வளர்ந்து, பல நூறு ஆண்டுகள் இந்த மண்ணில் வாழும். அந்த வகையில் டைனோசர் விலங்குகள் இம்மண்ணில் வாழ்ந்த காலங்களில் டைனோசர் விலங்குகளுக்கு உணவாக இருந்த GINKGO BILOBA ( COMMON NAME :- LIVING FOZZIL) என்ற தாவரம் சீனாவை தாயகமாக கொண்ட தாவரமாகும்.

இந்த தாவரங்கள் குளிர் பிரதேசங்களில் மட்டும் வளரக்கூடியவை. இந்த Ginkgo biloba என்ற இந்த தாவரம் விதையிலிருந்து ஒரு மரமாக வளர கிட்டத்தட்ட 60 ஆண்டு காலம் ஆகும். அதேபோல் உயிருடன் பல நூறாண்டு காலம் இந்த தாவரம் மண்ணில் வாழும் தன்மை உள்ளது. இந்த தாவரம் மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவ குணம் கொண்ட செடி ஆகும்.

“டைனோசருக்கு உணவாக இருந்த பழமை வாய்ந்த தாவரம் உதகையில் பராமரிப்பு” : GINKGO BILOBA குறித்த சிறப்பு செய்தி

40 வயதிற்கு மேல் மக்களுக்கு ஏற்படும் காது அடைப்பு நோய்க்கு இந்த தாவரத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் தான் மக்களுக்கு மருந்தாக வினியோகம் செய்யப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த தாவரம் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் தாவரவியல் படிக்கும் மாணவர்களுக்காக பராமரிக்கப்பட்டு வருகிறது.

தென்னிந்திய அளவில் உதகை தாவரவியல் பூங்காவில் மட்டும் உள்ள இந்த செடிகளை குறித்து ஆய்வு மேற்கொள்ள தாவரவியல் படிக்கும் மாணவ மாணவிகள், தாவரவியல் வல்லுநர்கள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் இந்த தாவரம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வந்து செல்லும் நிலையில், 200 லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வகை அறிய தாவரம் வரலாறு சிறப்புமிக்க தாவரமாக உதகை தாவரவியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருவது உதகைக்கு மட்டுமில்ல தமிழகத்திற்கே பெருமை சேர்ப்பதாகும்.

banner

Related Stories

Related Stories