தமிழ்நாடு

“நேற்று வனவாசம்.. இன்று சிறைவாசம்..” : வனத்துறையை திணறடித்த சங்கர் யானை பற்றிய சிறப்பு செய்தி தொகுப்பு !

கூண்டில் அடைக்கப்பட்டுள்ள சங்கர் யானைக்கு மூன்று மாதம், வளர்ப்பு யானை பயிற்சிகள் கூண்டில் வைத்து வழங்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

“நேற்று வனவாசம்.. இன்று சிறைவாசம்..” : வனத்துறையை திணறடித்த சங்கர் யானை பற்றிய சிறப்பு செய்தி தொகுப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாள்தோறும் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் தனது வலசுப் பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி நடந்து செல்லும் யானைகள் பல்வேறு விபத்துகளில் பலியாகும் சம்பவம் தொடர்கதையாகிறது.

குறிப்பாக, யானைகளின் வாழ்விட பரப்பு குறைவது, உணவுப் பற்றாக்குறை, நீர் மாசு, பூச்சிக்கொல்லிகள், சட்டவிரோத மின் வேலிகள், வேட்டை, ரயில் மற்றும் வாகன விபத்துகள், விவசாய பயிர்களை காக்க விவசாயிகள் கையாளும் தவறான உத்திகள் போன்றவற்றால் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

அதேசூழலில் யானைகள் மனித மோதலும் தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக வாழ்விடங்களை இழந்த யானைகளுக்கு உடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக மதம் பிடிப்பதும் அதிகரித்துள்ளது. அந்தவகையில் சமீபத்தில் மதம் பிடித்து மூன்று பேரைத் தாக்கிய யானை பற்றிய சிறப்பு செய்தி தொகுப்பு!

“நேற்று வனவாசம்.. இன்று சிறைவாசம்..” : வனத்துறையை திணறடித்த சங்கர் யானை பற்றிய சிறப்பு செய்தி தொகுப்பு !

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் தமிழகம் - கேரளா எல்லையில் கம்பீர நடையுடன் சுற்றித்திரிந்த சுல்லி கொம்பன் என்கின்ற சங்கர் யானை தமிழக எல்லையில் அமைந்துள்ள சேரம்பாடி, காப்பி காடு, பந்தலூர் போன்ற பகுதிகளிலும் கேரளா மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கம்பீர தோற்றத்துடன், வானத்தில் ராஜாவாக சுற்றித் திரிந்தது.

இந்நிலையில் கேரளா பகுதியில் சுற்றித் திரிந்த யானை சங்கர் தனது உடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக மதம் பிடித்து தமிழக எல்லைக்குள் நுழைந்தது. 30 முதல் 35 வயது இருக்கக்கூடிய சங்கர் யானை டிசம்பர் 10ஆம் தேதி ஒருவரையும், டிசம்பர் 13ஆம் தேதி தந்தை-மகன் ஆகியோரை தாக்கி கொன்ற கேரளாவுக்கு சென்றது.

அதன்பின் பெண் யானை கூட்டத்துடன் சேர்ந்த சங்கர் கேரளா வனப்பகுதியில் இருந்து பிப்ரவரி 8ம் தேதி மீண்டும் தமிழக எல்லைக்குள் நுழைந்தது. அப்போது இரு பெண் யானைகளுடன் ஒன்று சேர்ந்து மழவன் சேரம்பாடி பகுதியில் சுற்றித் திரிந்தது. அப்போது இந்த யானையைப் பிடிக்க 50க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள், 4 மருத்துவ குழு, 5 கும்கி யானைகள் உதவியுடன் எட்டுநாள் சங்கர் யானையை பிடிக்க முயற்சி தொடர்ந்து நடைபெற்றது.

“நேற்று வனவாசம்.. இன்று சிறைவாசம்..” : வனத்துறையை திணறடித்த சங்கர் யானை பற்றிய சிறப்பு செய்தி தொகுப்பு !

ஆனால் சங்கர் யானை கூட இருந்த இரு பெண் யானைகள், சங்கர் யானையை நெருங்க விடாமல் பாதுகாத்து அழைத்துச் சென்றது. இந்நிலையில் நேற்று பிற்பகல் யானைகளுக்கு மிகவும் பிடித்த பழமான அன்னாசிப்பழத்தை சங்கர் யானை சுற்றித்திரிந்த பகுதியில் வீசப்பட்டு, அதை சாப்பிட சங்கர் வந்தபோது கால்நடை மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து 5 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சங்கர் யானையின் கால்களில் கயிறு கட்டப்பட்டு கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றி சங்கர் யானையை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள அபரணியம் பகுதியில் சங்கர் யானையை அடைப்பதற்காக பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட கரோல் எனப்படும் (மர கூண்டு) அடைக்கப்பட்டது.

சங்கர் யானையை கும்கி யானைகள் உதவியுடன் இரவு 12 மணி அளவில் லாரியில் இருந்து இறக்கி அதை கூண்டில் அடைத்து நாலாபுறமும் கும்கி யானைகள் உதவியுடன் கரோலின் அடைக்கப்பட்டது. நேற்று காலை வரை ராஜா போல், இயற்கை நிறைந்த வனவாசத்தில் யானை கூட்டத்துடன் சுற்றித்திரிந்த சங்கர், இன்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். தற்போது கூண்டில் அடைக்கப்பட்டுள்ள சங்கர் யானைக்கு மூன்று மாதம், வளர்ப்பு யானை பயிற்சிகள் கூண்டில் வைத்து வழங்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories