வைரல்

“கார் கழுவ 10 ரூபா கொடுப்பாங்க.. இப்போ நானே கார் வாங்கி இருக்கேன்” : நம்ம வீட்டுப் பிள்ளை புகழின் வெற்றி!

காமெடியில் கலக்கிவரும் விஜய் டிவி புகழ் தற்போது சொந்தமாக ஒரு கார் வாங்கியதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துவருகின்றனர்.

“கார் கழுவ 10 ரூபா கொடுப்பாங்க.. இப்போ நானே கார் வாங்கி இருக்கேன்” : நம்ம வீட்டுப் பிள்ளை புகழின் வெற்றி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காமெடியில் கலக்கிவரும் விஜய் டிவி புகழ் தற்போது சொந்தமாக ஒரு கார் வாங்கியதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துவருகின்றனர். சமீபத்தில், அதிக ரசிகர்களை ஈர்த்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக விஜய் டிவியின் குக் வித் கோமாளி இருக்கிறது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் காமெடிக்கு பஞ்சம் இல்லை. இந்த நிகழ்ச்சியில் குக் மற்றும் கோமாளி சேர்ந்து செய்யும் அட்ராசிட்டி ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைப்பதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில், நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், பவித்ரா லட்சுமி ஆகியோர் இடம் பெற்றிருக்கும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா ஆகியோர் உள்ளனர். இவர்களின் நகைச்சுவையை ரசிக்க பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.

“கார் கழுவ 10 ரூபா கொடுப்பாங்க.. இப்போ நானே கார் வாங்கி இருக்கேன்” : நம்ம வீட்டுப் பிள்ளை புகழின் வெற்றி!

மேலும் சோஷியல் மீடியாக்களில் ஆர்மி பக்கமும், ரசிகர் பக்கங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கோமாளியாக இருந்து வரும் புகழுக்கு குக் வித் கோமாளி மூலமாக எக்கச்சக்க ரசிகர்கள் கிடைத்து இருக்கிறார்கள்.

நிகழ்ச்சியில் புகழும், சிவாங்கியும் அண்ணன் தங்கையாக செய்யும் ரகளைகள் கவலைகளை மறந்து வாய் விட்டு சிரிக்க வைக்கும். இவர்களுக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக் கணக்கான ஃபாலோயர்ஸ்களும் உள்ளனர்.

இதில், புகழை நம்ப வீட்டு பிள்ளையாகவே பலரும் பார்த்து ரசித்து வருகின்றன. வறுமையில் இருந்து சினிமா துறையில் சாதித்து தடம் பதித்தவர் புகழ் என்பதால், இவரின் வெற்றியை தங்களின் வெற்றி என்பது போல மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

“கார் கழுவ 10 ரூபா கொடுப்பாங்க.. இப்போ நானே கார் வாங்கி இருக்கேன்” : நம்ம வீட்டுப் பிள்ளை புகழின் வெற்றி!

இந்நிலையில், புகழ் தற்போது சொந்தமாக ஒரு கார் வாங்கியதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை புகழ் பதிவிட்டுள்ளார். அதில், “தன் குடும்பம் மிகவும் கஷ்டத்தில் இருந்தது தான்; என் தாத்தா, மாமா, சித்தப்பா என எல்லாருமே டிரைவர் தான்.

ஏன் நான் கார் வாஷில் வேலை செய்து இருக்கிறேன். டிரைவராக வேலை செய்து இருக்கிறேன். என் குடும்பத்தில் எல்லோருமே டிரைவர் தான். அது வேண்டாம் என்றார்கள். அதை எல்லாம் மீறி தான் நான் அந்த வேலைக்கு சென்றேன்.

தற்போது முதல் முறையாக இந்த வாழ்க்கையில் கார் வாங்கும் அளவுக்கு வந்திருப்பது உங்களால் மட்டும் தான். என் பரம்பரையிலேயே முதல் கார் இது. தான் கார் வாங்கும் செய்தியை அம்மாவிடம் கூறியதும் அவர் அழுதுட்டாங்க. குக் வித் கோமாளி டீமில் இருக்கும் அனைவரிடமும் சொன்னேன். அனைவரும் பாசிட்டிவ் ஆக பேசினார்கள். பலரும் நான் பெற்றிருக்கும் வளர்ச்சி பற்றி கூறி என்னை கட்டிப்பிடித்து கண்கலங்கினார்கள்.

“கார் கழுவ 10 ரூபா கொடுப்பாங்க.. இப்போ நானே கார் வாங்கி இருக்கேன்” : நம்ம வீட்டுப் பிள்ளை புகழின் வெற்றி!

பயங்கர சந்தோசமாக இருக்கிறேன். கார் வாஷில் வேலை செய்யும் போது ஒரு கார் கழுவ 10 ரூபா கொடுப்பாங்க. ஆன இப்போ நானே கார் வாங்கி இருக்கேன். இந்த வளர்ச்சிக்கு ரசிகர்களாகிய நீங்க மட்டும் தான் காரணம். இதை நான் எந்த உயரத்திற்கு சென்றாலும் மறக்க மாட்டேன்” என நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபலமான புகழுக்கு பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. ஏற்கெனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் புகழ் ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories