தமிழ்நாடு

60 நாட்களில் ₹225 உயர்ந்த கேஸ் விலை: கார்ப்பரேட்டுக்கு சாமரம் வீசும் மோடி அரசு; திண்டாடும் சாமானியர்கள்

சமையல் எரிவாயு சிலிண்டர் மீது கூடுதலாக 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

60 நாட்களில் ₹225 உயர்ந்த கேஸ் விலை:   கார்ப்பரேட்டுக்கு சாமரம் வீசும் மோடி அரசு; திண்டாடும் சாமானியர்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெட்ரோல், டீசல் விலையை போன்று சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் மாதந்தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் மூன்று முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருகிறது. பிப்ரவரி 1ல் 25 ரூபாயும், 15ம் தேதி 50ம் என அதிகரித்த கேஸ் விலை 25ம் தேதி கூடுதலாக 25 ரூபாய் உயர்த்தப்பட்டதில் ஒரே மாதத்தில் 100 ரூபாய் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது.

ஏற்கெனவே தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையால் அல்லல்பட்டு வரும் பொதுமக்களுக்கு கூடுதல் பரிசாக கேஸ் விலை உயர்வையும் கொடுத்து வழக்கம் போல் மத்திய மோடி அரசு மவுனம் காத்து வருகிறது.

இப்படி இருக்கையில், மார்ச் 1ம் தேதியான இன்று சமையல் கேஸின் விலை மேலும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 610 ரூபாயக இருந்த கேஸ் விலை ஜனவரி 1ல் 710, பிப்ரவரில் 810 என உயர்ந்து தற்போது வரையில் இரண்டே மாதங்களில் 225 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது பொது மக்களை பெரும் அதிர்ச்சியிலும், மீளாத் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories