வைரல்

“டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ரிஹான்னா ட்வீட்” : விவசாயிகளை தீவிரவாதிகள் என்ற கங்கனா ரனாவத்!

டெல்லி விவசாயிகளின் போராட்டம் குறித்து பாடகி ரிஹான்னா, கிரேட்டா தன்பெர்க் வெளியிட்ட ட்விட்டர் பதிவுகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.

“டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ரிஹான்னா ட்வீட்” : விவசாயிகளை தீவிரவாதிகள் என்ற கங்கனா ரனாவத்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குடியரசு தினத்தன்று டிராக்டர் அணிவகுப்பில் நடந்த வன்முறைக்குப் பிறகு போராட்டம் நடந்துவரும் பகுதியில் இணையவசதி துண்டிக்கப்பட்டு மீண்டும் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து டெல்லி - ஹரியானா எல்லையான சிங்குவிலும் போராட்டம் வெடித்ததை அடுத்து அங்கும் இணையம் துண்டிக்கப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரபல பாப் பாடகி ரிஹான்னா விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, ‘’நாம் ஏன் இதைப்பற்றி பேசவில்லை?’’ என்று கேள்வி எழுப்பியதுடன், போராட்டத்தை முடக்குவதற்கான முயற்சி குறித்த செய்திகளை டேக் செய்து அவர் குறிப்பிட்டிருந்தார்.

100 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்டுள்ள ரிஹான்னாவின் ட்வீட்டிற்கு ஆயிரக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்து பதில் ட்வீட் செய்துவருகின்றனர்.

இதே போல் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கிரேட்டா தன்பெர்க், தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுடன் நாங்கள் இணைந்து நிற்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வரும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்  ரிஹான்னாவிற்கு பதில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், ’’ஒருவரும் அதைவிட்டு பேசாததற்கு காரணம் அவர்கள் விவசாயிகள் அல்ல; இந்தியாவை பிரிக்க திட்டமிடும் தீவிரவாதிகள். எனவே அமெரிக்காவைப் போல, சீனா எளிதாக பிளவுபட்ட நாட்டுக்குள் நுழைந்துவிடும்.

அமைதியாக இரு முட்டாளே! உங்களைப்போல நாட்டை விற்பவர்கள் நாங்கள் அல்ல’’ என்று பதிவிட்டுள்ளார். கங்கனாவின் இந்த ட்விட்டர் பதிவு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories