வைரல்

“அலாவுதீன் அற்புத விளக்கு... வரம் தரும் பூதம்” - மருத்துவரை ஏமாற்றி ரூ. 31 லட்சம் மோசடி செய்த கும்பல்!

அலாவுதீன் அற்புத விளக்கு மற்றும் பூதத்தை பார்த்து, வேண்டியதெல்லாம் கிடைக்கும் எனும் பேராசையில் 31 லட்சம் ரூபாயை இழந்துள்ளார் மீரட்டைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர்.

“அலாவுதீன் அற்புத விளக்கு...  வரம் தரும் பூதம்” - மருத்துவரை ஏமாற்றி ரூ. 31 லட்சம் மோசடி செய்த கும்பல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில், அலாவுதீன் அற்புத விளக்கு என்று கூறி ரூபாய் 31 லட்சத்திற்கு விற்று மருத்துவரை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சியில் உள்ளது. உ.பி மாநிலம் மீரட்டைச் சேர்ந்த மருத்துவர் கான். இவர் அலாவுதீன் அற்புத விளக்கு மற்றும் பூதத்தை பார்த்து, வேண்டியதெல்லாம் கிடைக்கும் எனும் பேராசையில் 31 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.

கற்பனைக் கதையில் வரும் அலாவுதீனின் அற்புத விளக்கை தருவதாகக் கூறி, அந்தக் கதையில் வரும் பூதத்தையும் மோசடியாக வரவழைத்து ஏமாற்றி, மருத்துவர் கானிடம் இருந்து, 31 லட்சம் ரூபாயை ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது. இதுகுறித்து அவர் போலிஸில் புகார் அளித்துள்ளார்.

“அலாவுதீன் அற்புத விளக்கு...  வரம் தரும் பூதம்” - மருத்துவரை ஏமாற்றி ரூ. 31 லட்சம் மோசடி செய்த கும்பல்!

இதுகுறித்துப் பேசியுள்ள மருத்துவர் கான், “மீரட்டைச் சேர்ந்த இக்ராமுதீன், அனீஸ் ஆகியோர் தங்கள் தாய்க்கு சிகிச்சை அளிக்க என்னை அழைத்தனர். அவர்களது வீட்டுக்குச் சென்று சிகிச்சை அளித்துவந்தேன்.

அப்போது, ஒரு மந்திரவாதியை தங்களுக்கு தெரியும் என்றும், அவரிடம் அலாவுதீனின் அற்புத விளக்கு இருப்பதாகவும் கூறினர். அந்த விளக்கின் மூலம் பூதத்தையும் வரவழைத்துக் காட்டினர்.

அந்த விளக்குக்கு 1.5 கோடி ரூபாய் விலை பேசப்பட்டது. நான் 31 லட்ச ரூபாய் கொடுத்தேன். பிறகுதான், இது அனைத்தும் மோசடி என்பது தெரியவந்தது. மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவரே, பூதம் போல் வேடமிட்டு ஏமாற்றியுள்ளார்.” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories