தமிழ்நாடு

Rapido பைக்கில் சென்ற இளைஞரை தாக்கி செல்போனை பறித்த ஓட்டுநர் : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

ராபிடோ இரு சக்கர வாகன ஓட்டுநர் நள்ளிரவில் இளைஞரை தாக்கி செல்போனை பறித்துக்கொண்டு தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

சென்னையில் தனியார் கால் டாக்ஸி சேவை போன்று தனியார் இருசக்கர வாகன சேவையும் அளிக்கப்பட்டு வருகிறது. ராபிடோ சர்வீஸ் என்ற பெயரில் தனியார் இருசக்கர வாகன சேவை வழங்கப்பட்டு வருகிறது.

செல்போன் மூலம் இந்த ஆப்பில் பதிவு செய்து நாம் செல்லவேண்டிய இடத்தைக் குறிப்பிட்டால், இருசக்கர வாகனத்தில் இந்த சேவையை வழங்கும் நபர்கள் நாம் செல்லவேண்டிய இடத்தில் இறக்கி விடுவார்கள். அதற்கான சேவைக் கட்டணம் பெறப்படும்.

இந்த நிலையில், நேற்று சென்னை நம்மாழ்வார்பேட்டை சேர்ந்த கேசவ தன்ராஜ் என்ற இளைஞர் பெரம்பூரில் உள்ள தனது நண்பரை பார்க்க செல்வதற்காக இந்த தனியார் இருசக்கர வாகன சேவையை நேற்று இரவு பத்தரை மணியளவில் புக் செய்திருக்கிறார்.

Rapido பைக்கில் சென்ற இளைஞரை தாக்கி செல்போனை பறித்த ஓட்டுநர் : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

ராபிடோ மூலம் இளைஞர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றிருக்கிறார். பெரம்பூர் ரயில்வே போலிஸ் பரேடு மைதானம் அருகே சென்றபோது, பைக்கை ஓட்டி வந்த அந்த இளைஞர் கேசவ தன்ராஜை தாக்கி அவரிடம் இருந்த 21 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை பறித்துவிட்டுத் தப்பியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கேசவ தன்ராஜ் ஐ.சி.எப் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார். போலிஸார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சென்னை மாநகர காவல் ஆணையர், “தனியார் சேவை வழங்கும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் நன்னடத்தை சான்றிதழை காவல்துறையில் பெற்ற பின்னரே பணியமர்த்த வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தனியார் இருசக்கர வாகன சேவையில் ஈடு[அடும் இளைஞர் ஒருவர், வாடிக்கையாளரை தாக்கி செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனால் தனியார் இருசக்கர வாகன சேவை வழங்கும் நிறுவனங்கள் மீதும் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories