வைரல்

கம்பாளா போட்டியில் உசைன் போல்ட் ஓட்டத்தை மிஞ்சிய கட்டட தொழிலாளி : தடகளத்துறை செய்த நற்காரியம் !

கர்நாடகாவில் நடைபெற்ற கம்பாளா போட்டியில் 142.50 மீட்டர் தொலைவை வெறும் 13 நொடிகளில் கடந்து கட்டட தொழிலாளி சாதனை படைத்துள்ளார்.

கம்பாளா போட்டியில் உசைன் போல்ட் ஓட்டத்தை மிஞ்சிய கட்டட தொழிலாளி : தடகளத்துறை செய்த நற்காரியம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியைப் போல, கர்நாடகாவில் ஆண்டுதோறும் கம்பாளா என்ற எருமை மாட்டு ஓட்டப் பந்தயம் வெகு விமரிசையாக நடத்தப்படும்.

அந்த வகையில், நேற்று தெற்கு கர்நாடகாவின் மூடபித்ரி என்ற கிராமத்தில் கம்பாளா போட்டி நடைபெற்றது. இதில், மியார் பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளியான ஸ்ரீநிவாசா கவுடா பங்கேற்று வெறும் 13.62 நொடியில் 142.50 மீட்டர் தொலைவை கடந்துள்ளார்.

இது சர்வதேச அளவில் அதிவேகத்தில் ஓடக்கூடிய ஜமைக்காவின் ஓட்டப்பந்தைய வீரர் உசைன் போல்டின் ஒலிம்பிக் சாதனைக்கு இணையாக அமைந்திருக்கிறது.

100 மீட்டர் தொலைவை ஒலிம்பிக் போட்டியில் உசைன் போல்ட் 9.58 விநாடியில் கடந்திருப்பார். ஆனால் கம்பாளா போட்டியில் ஸ்ரீநிவாசா கவுடா அதே தொலை 9.55 நொடியில் கடந்திருக்கிறார். இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

ஸ்ரீநிவாசா கவுடாவின் இந்த சாதனைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், திருவனந்தபுர காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகிந்தா உள்ளிட்ட பலர் வாழ்த்தியதோடு, அவரை இந்திய தடகள போட்டியில் சேர்த்து நாட்டுக்கு பெருமை சேருங்கள் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய விளையாட்டுத் துறை இணை அமைச்சரான கிரண் ரிஜிஜூ, “இந்திய விளையாட்டுத் துறை ஆணையத்திடம் ஸ்ரீநிவாசா கவுடா குறித்து தெரிவித்திருக்கிறேன். அவருக்கான ரயில் டிக்கெட் கொடுக்கப்பட்டுவிட்டது. ஸ்ரீநிவாசா கவுடா வருகிற திங்கள் கிழமை பெங்களூருவில் உள்ள விளையாட்டு ஆணையத்திற்கு சென்றடைவார். அங்கு அவருக்கு மூத்த பயிற்சியாளர் மூலம் தகுந்த பயிற்சியளிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories