வைரல்

கொரோனாவை தடுக்க ரூ.3 ஆயிரம் இருந்தா போதும் - வித்தை காட்டிய யோகா டீச்சர்.. 

தொற்றுநோயானா கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் சென்னை பெண் யோகா பயிற்சியாளர் ஆசனம் டிப்ஸ் கொடுத்து பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார்.

கொரோனாவை தடுக்க ரூ.3 ஆயிரம் இருந்தா போதும் - வித்தை காட்டிய யோகா டீச்சர்.. 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சீனாவை உலுக்கி எடுத்து வரும் நாவல் கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச மருத்துவ அவசர நிலையை அறிவித்து உலக சுகாதார நிறுவனமும் எச்சரித்து வருகிறது.

இந்த நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகளோ, வராமல் தடுப்பதற்கான தடுப்பூசிகளும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படியே கண்டுபிடித்தால் பல நாட்கள் ஆகும் என்பதால் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான அறிகுறிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், மக்களையும் விழிப்புணர்வுடன் இருக்கும் படி உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி வருகிறது. இப்படி இருக்கையில், கொரோனா வைரஸ் வந்தால் குணப்படுத்துவதற்கும், வராமல் தடுப்பதற்கும் பல்வேறு நாட்டு மருந்துகளை எடுத்துக்கொள்ளச் சொல்லி சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

இது ஒரு புறமிருக்க, இந்த கொரோனா வைரஸை பயன்படுத்தி லாபம் பார்க்கவும் சிலர் திட்டமிட்டு வருகின்றனர். அவ்வகையில், அண்மையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஹோட்டல் ஒன்று சின்ன வெங்காயம் ஊத்தாப்பம் சாப்பிட்டால் நோய் தொற்றிலிருந்து தப்பிக்கலாம் என விளம்பரப்படுத்தி இருந்தது. இது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பேசு பொருளுக்கு உள்ளானது.

இந்நிலையில், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முகுந்தி என்கிற யோகா பயிற்சியாளர் இந்த கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கான யோகாசனம் உள்ளது எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சலபாசனம் என்ற யோகாவை வெறும் 5 நாட்கள் மட்டும் செய்து வந்தால் கொரோனா வைரஸ் அண்டாமல் இருப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் என தெரிவித்துள்ளார்.

இந்த யோகாசனம் மூலம் கொரோனா வைரஸை போக்கமுடியும் என்பதை எப்படி நிரூபிப்பீர்கள் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அருகே இருந்த தனது கணவரை குப்புற படுக்க வைத்து இந்த ஆசனத்தை செய்யச்சொல்லி காண்பித்துள்ளார். இதனை செய்வதற்கு ஒரு சிட்டிங்கிற்கு 3 ஆயிரம் ரூபாய் செலவாகும் எனவும் முகுந்தி கூறியுள்ளார்.

கொரோனாவை தடுக்க ரூ.3 ஆயிரம் இருந்தா போதும் - வித்தை காட்டிய யோகா டீச்சர்.. 

கொரோனா வைரஸுக்கு மருந்துகளும் தடுப்பூசிகளும் கண்டுபிடிக்காததால் இது போன்ற வியாபார நோக்கர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் கூறி வருகின்றனர் எனவும் கருத்து தெரிவிக்கின்றனர்.

உண்மையில், முதுகு வலி, தசைப்பிடிப்பு போன்ற பிரச்னைகளுக்கான நிவாரணியாகவே இந்த சலபாசனம் உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories