வைரல்

“கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க இதைச் சாப்பிடுங்கள்” - அறிவியலோடு வீம்பாக விளையாடும் காரைக்குடி ஹோட்டல்!

கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகள் அச்சுறுத்தி வரும் நிலையில் இந்த நோய்த்தொற்று வராமலிருக்க சின்ன வெங்காயம் சாப்பிடவும் என காரைக்குடி உணவு விடுதி ஒன்று விளம்பரப்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் பரவலாக கொரோனா வைரஸ் குறித்தே பேசப்பட்டு வருகிறது. சீனாவில் தொடர்ந்து இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழந்து வரும் நிலையில் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

உலக சுகாதார நிறுவனம், கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக சர்வதேச மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், கொரொனா வைரஸ் தாக்காமல் இருக்க பல்வேறு நாட்டு மருந்துகளை எடுத்துக்கொள்ளச் சொல்லி சமூக வலைதளங்களில் வதந்திகளும் வேகமாக பரவி வருகின்றன. மேலும், கொரோனா வைரஸை கிண்டலடித்தும் மீம்கள் வைரலாகி வருகின்றன.

“கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க இதைச் சாப்பிடுங்கள்” - அறிவியலோடு வீம்பாக விளையாடும் காரைக்குடி ஹோட்டல்!

இந்நிலையில், காரைக்குடியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில், “கொரோனா வைரஸ் பாதிப்பு வராமலிருக்க சின்ன வெங்காய ஊத்தாப்பம் சாப்பிடவும்” என விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது. மேலும், சின்ன வெங்காயமும், நல்லெண்ணெய்யும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வல்லமை உடையது. ஆகையால் அதனை மீண்டும் நினைவூட்டவே இதுபோன்று விளம்பரப்படுத்தியுள்ளோம் என அந்த ஹோட்டல் உரிமையாளர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸுக்கு இதுவரை எந்த தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில், இதுபோன்று விளம்பரம் செய்து அறிவியலோடு விளையாட வேண்டாம் என்று சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories