வைரல்

‘வேலியே பயிரை மேயலாமா?’ - பால் பாக்கெட் திருடிய போலிஸார்! VIDEO

உத்திரப் பிரதேச மாநிலத்தில் பால் பாக்கெட்டுகளை போலிஸார் ஒருவர் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

‘வேலியே பயிரை மேயலாமா?’ - பால் பாக்கெட் திருடிய போலிஸார்! VIDEO
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உத்திரப் பிரதேச மாநிலம் நொய்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனை சாவடி அருகே பால் விற்பனை மையம் அமைந்துள்ளது. நேற்று முன் தினம் (ஜனவரி 19) இரவு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர்கள் பால் பாக்கெட்டுகளை திருடியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர் ஒருவர், கடைக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த பாக்கெட் பாலை எடுத்துக்கொண்டு அருகில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தை நோக்கிச் செல்கிறார்.

அவர் திருடப்பட்ட பால் பாக்கெட்டை வாகனத்தில் அமர்ந்திருந்த சக காவலரிடம் ஒப்படைப்பதும் சி.சி.டி.வி.யில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பான சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

முன்னதாக, லக்னோவில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடமிருந்து போலிஸார் போர்வைகளை எடுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது குறிப்பிடதக்கது.

banner

Related Stories

Related Stories