வைரல்

“இதுபோல இந்தியர்களும் பொறுமையாக இருக்கலாம்” - வைரலாகும் ட்விட்டர் வீடியோ!

சிங்கப்பூர் விமான நிலையத்தில் சூட்கேஸுகள் ஒன்றன் பின் ஒன்றாக பொறுமை காத்து வரும் வீடியோ வைரலாகியுள்ளது.

“இதுபோல இந்தியர்களும் பொறுமையாக இருக்கலாம்” - வைரலாகும் ட்விட்டர் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிங்கப்பூர் விமான நிலையத்தின் கன்வேயர் பெல்ட்டில் இருவேறு புறத்தில் இருந்தும் சூட்கேஸ்கள் ஒரு இடத்தில் வந்து நிற்கும் போது முன்னர் வரும் பெட்டிகளுக்கு வழிவிட்டு மறுபுறமுள்ள பெட்டி காத்திருக்கும் வகையில் சென்சார் செய்யப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்றவாறு ஒவ்வொரு பெட்டியும் எவ்வித இடையூறும் இல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக வந்து பயணிகளைச் சென்றடைகின்றன.

இது குறித்த வீடியோ ஒன்று ட்விட்டரில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. வீடியோவை பகிர்ந்த இந்தியர் ஒருவர், இந்த சூட்கேஸுகளை போல நம் மக்களும் ஒருவருக்கு ஒருவர் வழிவிட்டு பொறுமையாக இருந்தால் நன்றாக இருக்கும் எனக் குறிப்ட்டுள்ளார்.

இந்த வீடியோவுக்கு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories