வைரல்

உண்மையைச் சொல்லி லீவ் கேட்ட மாணவனுக்கு குவியும் பாராட்டுகள்!

விடுமுறை வேண்டும் என்பதற்காக உண்மையான காரணத்தைச் சொல்லி கடிதம் எழுதிய திருவாரூர் மாணவனின் செயல் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது

உண்மையைச் சொல்லி லீவ் கேட்ட மாணவனுக்கு குவியும் பாராட்டுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கபடி போட்டியை காணச் சென்றதால் வகுப்புக்கு வரவில்லை என உண்மையான காரணத்தைச் சொல்லி மாணவன் ஒருவன் விடுப்பு கேட்ட சுவாரஸ்யமான சம்பவம் திருவாரூரில் நடந்துள்ளது.

திருவாரூர் மேலராதாநல்லூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியின் ஆசிரியர் மணிமாறன், மாணவர்கள் நேரடியாகச் சொல்லமுடியாத கருத்துகளை தெரிவிப்பதற்கு கருத்து சுதந்திரம் என்ற பெட்டியை பள்ளியில் வைத்துள்ளார்.

உண்மையைச் சொல்லி லீவ் கேட்ட மாணவனுக்கு குவியும் பாராட்டுகள்!

அவற்றில் எழுதப்பட்டுள்ள கடிதங்களைக்கொண்டு மாணவர்களின் பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளார் ஆசிரியர் மணிமாறன். இந்நிலையில், அவருக்கு 8ம் வகுப்பு படிக்கும் தீபக் என்ற மாணவன் கடிதம் ஒன்று எழுதியிருக்கிறான்.

அதில், தனது ஊரில் நடைபெற்ற கபடி போட்டியை பார்த்ததால் உடல் சோர்வாக இருப்பதாகவும், அதனால் விடுமுறை அளிக்குமாறு கடிதத்தைல் குறிப்பிட்டிருந்தார்.

உண்மையைச் சொல்லி லீவ் கேட்ட மாணவனுக்கு குவியும் பாராட்டுகள்!

இதனை படித்த ஆசிரியர் மணிமாறன், மாணவனின் நேர்மையை கண்டு வியந்து அவருக்கு விடுப்பும் அளித்துள்ளார். மேலும், மாணவன் தீபக்கின் விடுமுறை கடிதமும் சமூக வலைதளத்தில் வைரலாகி அவருக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories