வைரல்

நெற்றியில் வாலுடன் பிறந்த ‘நார்வால்’ நாய்க்குட்டி: இணையத்தில் வைரலாகும் யூனிகார்ன் பப்பி!

அமெரிக்காவில் உள்ள கான்சாஸ் பகுதியில் முகத்தின் நெற்றியில் வாலுடன் பிறந்த நாய்க்குட்டி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது

நெற்றியில் வாலுடன் பிறந்த ‘நார்வால்’ நாய்க்குட்டி: இணையத்தில் வைரலாகும் யூனிகார்ன் பப்பி!
 • Twitter
 • Facebook
 • WhatsApp
Updated on

செல்லப்பிராணிகளான நாய்கள் என்றாலே அனைவருக்கும் இஷ்டமாகவே இருக்கும். நாய்க்குட்டிகள் என்றால் நேரம் காலம் போவது கூட தெரியாமல் கொஞ்சுவார்கள். சிலரது நாய்க்குட்டிகளின் செயல்கள் சமூக வலைதளங்களில் பலரையும் ஈர்க்கும்.

நெற்றியில் வாலுடன் பிறந்த ‘நார்வால்’ நாய்க்குட்டி: இணையத்தில் வைரலாகும் யூனிகார்ன் பப்பி!

அந்த வகையில், அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் கான்சாஸ் நகரத்தில் உள்ள தெருவில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நாய்க்குட்டி ஒன்று உலக அளவில் பிரபலமடைந்துள்ளது.

நெற்றியில் வாலுடன் பிறந்த ‘நார்வால்’ நாய்க்குட்டி: இணையத்தில் வைரலாகும் யூனிகார்ன் பப்பி!

ஏனெனில், அந்த நாய்க்குட்டி முகத்தின் நெற்றிப்பகுதியில் வாலை கொண்டுள்ளது. சாலையோரத்தில் பனியில் உறைந்து கிடந்த இந்த நாய்க்குட்டியை கண்டெடுத்த மாக் அமைப்பின் ஸ்டெபான் இதற்கு நார்வால் என்றும் பெயரிட்டுள்ளார்.

நெற்றியில் வாலுடன் பிறந்த ‘நார்வால்’ நாய்க்குட்டி: இணையத்தில் வைரலாகும் யூனிகார்ன் பப்பி!

மாக் அமைப்பு, விநோத உறுப்புகளை கொண்ட செல்லப்பிராணிகளை கண்டெடுத்து 7 ஆண்டுகளாக பராமரித்து வருகிறது. தெருவோரத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்த நார்வால் நாய்க்குட்டி மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

நெற்றியில் வாலுடன் பிறந்த ‘நார்வால்’ நாய்க்குட்டி: இணையத்தில் வைரலாகும் யூனிகார்ன் பப்பி!

அப்போது எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில், நார்வாலின் முகத்தில் இருக்கும் வாலுக்கும் அதன் உள் உறுப்புகளோடு எந்த தொடர்பும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

நெற்றியில் வாலுடன் பிறந்த ‘நார்வால்’ நாய்க்குட்டி: இணையத்தில் வைரலாகும் யூனிகார்ன் பப்பி!

அதே சமயத்தில் நெற்றியில் இருக்கும் வாலால் எந்த பாதிப்பும் நாய்க்குட்டிக்கு ஏற்படாது என்றும், மற்ற நாய்களைப் போலவே நார்வாலும் செயல்படும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நெற்றியில் வாலுடன் பிறந்த ‘நார்வால்’ நாய்க்குட்டி: இணையத்தில் வைரலாகும் யூனிகார்ன் பப்பி!

இதற்கிடையில், ஆர்க்டிக் கடலில் வாழும் நார்வால் திமிங்கலத்தின் தலையின் முன்புறத்தில் தந்தம் போன்ற கூர்மையான உறுப்பு இருக்கும். அதுப்போலவே இந்த நாய்க்குட்டிக்கும் முகத்தின் நெற்றியில் வால் இருப்பதால் நார்வால் என பெயரிட்டதாக மாக் அமைப்பு கூறியுள்ளது.

நெற்றியில் வாலுடன் பிறந்த ‘நார்வால்’ நாய்க்குட்டி: இணையத்தில் வைரலாகும் யூனிகார்ன் பப்பி!

மேலும், இணையவாசிகளால் நார்வால் நாய்க்குட்டி யூனிகார்ன் பப்பி எனக் கூறப்பட்டு வருகிறது. ஏனெனில், ஒற்றைக் கொம்பை உடைய குதிரை போன்ற வடிவில் நாய்க்குட்டி இருப்பதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories