வைரல்

வைரலாகும் நடிகை நயன்தாராவின் போட்டோ ஷூட் வீடியோ! - அட்டகாச ஆடைகளில் அசத்தும் போட்டோ ஆல்பம்! 

பிரபல நடிகை நயன்தாராவின் ஃபோட்டோஷூட் போட்டோ ஆல்பத்தை தொடர்ந்து, அந்த ஃபோட்டோ ஷூட்டின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

வைரலாகும் நடிகை நயன்தாராவின் போட்டோ ஷூட் வீடியோ! - அட்டகாச ஆடைகளில் அசத்தும் போட்டோ ஆல்பம்! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

இந்திய சினிமா உலகின் முன்னணி நடிகையாக அனைவரின் மனதையும் கவர்ந்த நடிகை நயன்தாரா நடித்திருக்கும் ‘பிகில்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. நடிகர் விஜய் நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் அட்லீ இயக்கியுள்ளார்.

வரும் 12-ம் தேதி மாலை 6 மணிக்கு பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாவதாக ஏ.ஜி.எஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு பொங்கலுக்கு வெளியாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’, மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில், மிலிந்த் ராவ் இயக்கும் ‘நெற்றிகண்’ ஆகியப் படங்களிலும் நயன்தாரா நடித்துள்ளார்.

அனைத்து தரப்பு மக்களின் மனங்கவர்ந்த நடிகையான நயன்தாராவின் சமீபத்திய போட்டோஷூட்டில் அவர் விதவிதமான உடைகளில் கலக்கலாக தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளார்.

வைரலாகும் நடிகை நயன்தாராவின் போட்டோ ஷூட் வீடியோ! - அட்டகாச ஆடைகளில் அசத்தும் போட்டோ ஆல்பம்! 
வைரலாகும் நடிகை நயன்தாராவின் போட்டோ ஷூட் வீடியோ! - அட்டகாச ஆடைகளில் அசத்தும் போட்டோ ஆல்பம்! 
வைரலாகும் நடிகை நயன்தாராவின் போட்டோ ஷூட் வீடியோ! - அட்டகாச ஆடைகளில் அசத்தும் போட்டோ ஆல்பம்! 
வைரலாகும் நடிகை நயன்தாராவின் போட்டோ ஷூட் வீடியோ! - அட்டகாச ஆடைகளில் அசத்தும் போட்டோ ஆல்பம்! 

சமீபத்தில் ‘வோக்’ பத்திரிகைக்கு போட்டோஷூட்டுடன் இண்டர்வியூவும் கொடுத்தார். அந்த ஃபோட்டோ ஷூட்டின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை சமூக ஊடகங்களில் நயன்தாராவின் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

நயன்தாரா இந்த படங்களை பகிர்ந்தவுடன், ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் மேலான அவரது ரசிகர்கள் அவரது புத்தம்புது புகைப்படங்களையும், வீடியோவையும் வெகுவாக ரசித்து, விருப்பக்குறி இட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories