வைரல்

18 ஆண்டுகளில் 300 ஏக்கர் காடுகளை உருவாக்கிய ‘வனமகன்’- சிலிர்க்க வைக்கும் சாதனை!

மணிப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 18 ஆண்டுகளில் 300 ஏக்கர் காடுகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

 18 ஆண்டுகளில் 300 ஏக்கர் காடுகளை உருவாக்கிய ‘வனமகன்’- சிலிர்க்க வைக்கும் சாதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

உலகம் முழுதும் சுற்றுச்சூழல் பிரச்னை தலையாய பிரச்னையாக உள்ளது. அமேசான் காடு பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் 300 ஏக்கர் காடுகளை உருவாக்கியிருக்கிறார் மணிப்பூரைச் சேர்ந்த இளைஞர் லோயா.

மணிப்பூர் மாநிலம் இம்பாலைச் சேர்ந்த மொயெரெங்டாம் லோயா என்ற அந்த இளைஞர் லாங்கோல் மலைகளுக்கு தனது சிறுவயதில் பயணம் மேற்கொண்டார். பசுமையான அந்த மலைப்பகுதி பிற்காலத்தில் அதன்தன்மையை இழந்து விட்டது. காடுகள் அழிக்கப்பட்டு வறட்சியான பிரதேசமாக ஆனது.

லோயா கடந்த 2000ம் ஆண்டில் தனது கல்லூரிப்படிப்பை முடித்து விட்டு அந்த மலைப்பகுதிக்கு மீண்டும் வந்தபோது, காடு அழிக்கப்பட்டதை கண்டு வேதனையடைந்தார். இதனைத் தொடர்ந்து புதிய காடுகளை உருவாக்க அவர் உறுதிபூண்டார். கடந்த 2002 ஆம் ஆண்டில் இருந்து அந்த பகுதியிலேயே ஒரு குடிசை கட்டி குடியேறியவர் தொடர்ந்து ஓக், மூங்கில் போன்ற மரங்களை நடத் தொடங்கினார்.

 18 ஆண்டுகளில் 300 ஏக்கர் காடுகளை உருவாக்கிய ‘வனமகன்’- சிலிர்க்க வைக்கும் சாதனை!

காடு வளர்ந்தது. அந்த காட்டிற்கு புன்ஷிலோக் என்று பெயரிட்டார். புன்ஷிலோக் என்றால் ‘வாழ்க்கையின் வசந்தம்’என்று பொருள்.

லோயா, தான் பார்த்து வந்த மருத்துவ பிரதிநிதி வேலையை உதறிவிட்டு தனது நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் தீவிரமாக காட்டில் பசுமையை விதைக்கத் தொடங்கியதன் விளைவு , இன்றைய தினம் 18 ஆண்டுகள் கழித்து 300 ஏக்கர் காடு உருவாகியுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 51 ஏ (கிராம்) ஒவ்வொரு குடிமகனும் தனது சூழலைப் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளான் என்பதை வழங்குகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு

லோயாவும் அவரது நண்பர்களும் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட காடுகளை வளர்த்து, அங்கு வனவிலங்குகளைப் பாதுகாக்க ஒரு சமூகத்தைத் தொடங்கியுள்ளார்.

காடு இப்போது பூத்துக் குலுங்குகிறது. பலவிதமான மரங்களும், செடி கொடிகளும் பசுமையாக உருவாகி இருக்கின்றன. பாம்புகள், மான்கள், அணில்கள், பறவைகள், விலங்குகள் என காடு அற்புதமாக செழித்திருக்கிறது.

காட்டில் இருந்து காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அண்டை கிராமவாசிகளும் பயன்பெறுகின்றனர். காடுகளினால் ரம்மியமான குளிரையும், பறவைகளின் ஒலியையும் காட்டின் குரலையும் அவர்கள் அனுபவிக்கிறார்கள்.

 18 ஆண்டுகளில் 300 ஏக்கர் காடுகளை உருவாக்கிய ‘வனமகன்’- சிலிர்க்க வைக்கும் சாதனை!

சமூக சேவகர் ஈரோம் ஷர்மிளா தனது நீண்ட உண்ணாவிரதத்தை முடித்து ‘வாழ்க்கையின் வசந்தம்’ என்ற இந்த காட்டிற்கு வருகை தந்திருக்கிறார். இயற்கையோடு இயந்த வாழ்க்கையை அனுபவித்திருக்கிறார்.

 18 ஆண்டுகளில் 300 ஏக்கர் காடுகளை உருவாக்கிய ‘வனமகன்’- சிலிர்க்க வைக்கும் சாதனை!

உலகமெங்கும் காடுகள் அழிக்கப்பட்டு நிலையில் 300 ஏக்கர் காடுகளை உருவாக்கிய லோயா, வனமகன் மட்டுமல்ல நாட்டின் சிறந்த குடிமகனும்கூட.

banner

Related Stories

Related Stories