வைரல்

இப்படி சாப்பிட்டால் உடல் எடையும் அதிகரிக்காது, தொப்பையும் போடாது - மிக எளிமையான முறை!

இப்படி சாப்பிட்டால் உடல் எடையும் அதிகரிக்காது, தொப்பையும் போடாது - மிக எளிமையான முறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இன்றைய அதிவேக உலகில் பலரும் உணவை மெல்லாமல் விழுங்கும் பழக்கத்தை வைத்திருக்கின்றனர். இதன் அடையாளமாக அவர்களின் மலமும் மிகவும் கெட்டித்தன்மையுடனும், நீரில் மிதக்காதபடியும் இருக்கும். அவர்களின் மலத்தைப் பார்த்தாலே, அவரவரின் மெல்லும் பழக்கத்தைக் கண்டுபிடித்துவிடலாம். சீராக மென்று சுவைத்து சாப்பிடுவோரின் மலம், கழிக்க சுலபமாகவும், லேசாகவும் நீரில் மிதக்க கூடியதாகவும் இருக்கும்.

மனித உடலில், வாயில் மட்டுமே பற்கள் உள்ளன வயிற்றில் பற்கள் கிடையாது. அப்படி இருக்க ஒன்றும்பாதியாக மென்று சாப்பிட்டால் வயிற்று உப்புசம், உணவு எதுகளித்தல், வாயு சேருதல், விரைவில் சர்க்கரை நோய், உடல்பருமன், தொப்பை இவையெல்லாம் ஏற்படும்.

ஒவ்வொரு உணவும் வெவ்வேறு மாதிரி எனவே பொதுவாக இத்தனை முறை மெல்லுங்கள் எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆனால், பொது முறைகள் சில சொல்லப்பட்டுள்ளது. சில காய், கனி வகைகளை 8-10 முறை மென்று சுவைத்தாலே போதும். கடினமான இறைச்சி துண்டுகளை 20-30 முறை மெல்ல வேண்டி இருக்கும். ஆதலால், இந்த முறை அனைத்து உணவுகளுக்கும் பொருந்தாது. ஒவ்வொரு உணவுக்கும் மெல்லும் முறைகள் மாறுப்படும். அப்படியெனில், எத்தனை முறை மெல்வது என எப்படி தெரிந்து கொள்வது?

பொதுவாகவே, உதடுகளை மூடியபடி, உணவை மென்று கூழாக அரைத்த பின்தான் விழுங்க வேண்டும். ஆங்கிலேயர்கள் இந்தப் பழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். அவர்களிடம் எல்லாவற்றையும் கற்றுக்கொண்ட நாம், இந்த நல்ல பழக்கத்தைக் கற்றுக்கொள்ள தவறிவிட்டோம். நொறுங்க தின்பது ஆரோக்கியத்துக்கான ஒரு வழி. உணவு உண்ட பின், வாயில் உணவு துகள்களாக இருந்தால், சரியாக மென்று சாப்பிடவில்லை என அர்த்தம்.

கூழாக அரைத்து மெல்லும் பழக்கமே சிறந்தது. இதனால், செரிமானப் பிரச்சனை நீங்கும், திருப்தி உணர்வு கிடைக்கும், கணையம் மற்றும் கல்லீரலின் வேலை சுலபமாகும். நொறுங்க மென்று சாப்பிட்டால் தொப்பை போடாது. உடல்பருமனாகும் வாய்ப்பு குறைந்துவிடும். பற்கள், வயிற்றின் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

banner

Related Stories

Related Stories