வைரல்

தன்னைக் கடித்த பாம்பை பதிலுக்கு கடித்து பழிதீர்த்துக்கொண்ட இளைஞர் : குடிபோதையில் விபரீதம்!

உத்தர பிரதேசத்தில் குடிபோதையில் இருந்த இளைஞர் தன்னை கடித்த பாம்பை கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன்னைக் கடித்த பாம்பை பதிலுக்கு கடித்து பழிதீர்த்துக்கொண்ட இளைஞர் : குடிபோதையில் விபரீதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தர பிரதேசத்தில் குடிபோதையில் இருந்த இளைஞர் தன்னைக் கடித்த பாம்பை, கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த இளைஞருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.

உத்தர பிரதேச மாநிலத்தில் ஈட்டா மாவட்டத்தில் உள்ள அஸ்ரோலி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் நேற்று குடிபோதையில் அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரை விஷப் பாம்பு ஒன்று கடித்துள்ளது.

பாம்பு கடித்ததை உணர்ந்த ராஜ்குமார், ஆத்திரமடைந்து அந்த பாம்பைக் கையால் பிடித்துக் கடித்துள்ளார். அவர் பாம்பை மூன்று துண்டாக கடித்து வீசியுள்ளார். பின்னர் ராஜ்குமார் வீட்டில் உள்ளவர்கள் வந்து இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் மயக்க நிலையில் இருந்த ராஜ்குமாரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமத்திள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவர் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories