வைரல்

டிக் - டாக் appக்கு ஆப்பு : புதிய பொழுதுபோக்கு செயலியை களமிறக்குகிறது பேஸ்புக் ? எகிறும் எதிர்பார்ப்பு !

ஃபேஸ்புக் நிறுவனம் டிக்- டாக் செயலிக்குப் போட்டியாக ஒரு புதிய செயலியை உருவாக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

டிக் - டாக் appக்கு ஆப்பு : புதிய பொழுதுபோக்கு செயலியை களமிறக்குகிறது பேஸ்புக் ? எகிறும் எதிர்பார்ப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

தற்போது உள்ள சமூக வலைத்தளங்களில் இளைஞர்களை மட்டுமின்றி வயது பாரபட்சமில்லாமல் அனைவர் மத்தியில் பிரபலமடைந்து உள்ளது டிக்-டாக் செயலி. இந்த செயலி மூலம் பாட்டு பாடியும் ,நடனம் ஆடியும் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்தி வீடியோக்களைமக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இது ஒரு புறமிருக்க, சிலர் இதனைத் தவறாக உபயோகித்து ஆபாச பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர். இந்த டிக்-டாக் செயலியை தடை செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, டிக்-டாக் செயலியை இந்தியாவில் பதிவிறக்கம் செய்ய தடைவிதிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்யப்பட்டு டிக்-டாக் மீதான தடை நீக்கப்பட்டது.

டிக் - டாக் appக்கு ஆப்பு : புதிய பொழுதுபோக்கு செயலியை களமிறக்குகிறது பேஸ்புக் ? எகிறும் எதிர்பார்ப்பு !

இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் டிக்-டாக் செயலிக்கு போட்டியாக ஒரு புதிய செயலியை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக ட்விட்டர் நிறுவனத்தில் வீடியோ தளத்தில் வேலை செய்து வந்த ஜேசன் டாஃப் பேஸ்புக் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் புதிய செயலிக்கான சோதனை குழு ஒன்றை நியமனம் செய்தது. இந்த சோதனை குழு புதிய செயலிகளை வாடிக்கையாளர்களுக்கு வெளியிடும் என கூறப்பட்ட நிலையில், ஜேசன் டாஃப் இடம்பெற்றுள்ளதால் டிக் டாக் செயலிக்கு போட்டியாக ஒரு புதிய செயலியை உருவாக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேஸ்புக் நிறுவனர் மார்க் மொபைல் செயலிகள்தான் இனி டெக் உலகத்தை ஆளும் என்பதை முன்கூட்டியே அறிந்து வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசன்ஜர் உள்ளிட்ட செயலிகளை களம் இறக்கினார். இன்றைய இளைய சமுதாயம் இந்த செயலிகளில்தான் பெரும்பான்மையான நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இதனால், நிச்சயம் டிக்-டாக் செயலிக்குப் போட்டியாக பேஸ்புக்கில் இருந்து ஒரு புதிய செயலியை விரைவில் எதிர்பார்க்கலாம்.

banner

Related Stories

Related Stories