வைரல்

“காப்பாற்றுங்கள்; அல்லது குடும்பத்தோடு கொன்றுவிடுங்கள்” : ஜனாதிபதிக்கு ரத்தத்தால் கடிதம்!

பஞ்சாப்பை சேர்ந்த 2 சிறுமிகள் “எங்களைக் காப்பாற்றுங்கள்; அல்லது குடும்பத்தோடு கொன்றுவிடுங்கள்” என ஜனாதிபதிக்கு ரத்தத்தால் கடிதம் எழுதியுள்ளனர்.

“காப்பாற்றுங்கள்; அல்லது குடும்பத்தோடு கொன்றுவிடுங்கள்” : ஜனாதிபதிக்கு ரத்தத்தால் கடிதம்!
ANI
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சேர்ந்த 2 சிறுமிகள் குடியரசுத் தலைவருக்கு தங்களது ரத்தத்தால் கடிம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் மோகா நகரத்தைச் சேர்ந்த நிஷா மற்றும் அமன் ஜோட் கவுர் எனும் இரண்டு சிறுமிகள் தங்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதிலிருந்து தங்களை மீட்கவேண்டும் என்றும் சிறுமிகள் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிறுமிகள் தங்களது கடிதத்தில், “நாங்கள் ஏமாற்றியதாக 2 பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 420-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் மீது தவறு இல்லை.

முறையாக விசாரிக்குமாறு காவல் துறையை கேட்டுக் கொண்டாலும் அவர்கள் எங்கள் கோரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை. எங்களுக்கு நீதி வழங்காவிட்டால் எங்களை குடும்பத்தோடு கருணைக் கொலை செய்துவிடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

சிறுமிகளின் குற்றச்சாட்டை மோகா டி.எஸ்.பி குல்ஜிந்தர் சிங் மறுத்துள்ளார். அவர்கள் மீது தகுந்த விசாரணைகளுக்குப் பிறகே கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories