வைரல்

“நீட் தற்கொலைகளை நிகழ்த்தியவர்கள் நாம்தான்” : இயக்குனர் பா.ரஞ்சித் ட்வீட்!

நீட் தேர்வில் தோல்வியால் 3 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பதைத் தொடர்ந்து “தற்கொலையை நிகழ்த்தியவர்கள் நாம்தான்” என ட்விட்டரில் இயக்குனர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.

“நீட் தற்கொலைகளை நிகழ்த்தியவர்கள் நாம்தான்” : இயக்குனர் பா.ரஞ்சித் ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்திவருகிறது மத்திய அரசு.

நீட் தேர்வில் போதுமான மதிப்பெண்கள் பெற முடியாமல் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ, ஏஞ்சலின் சுருதி ஆகியோர் கடந்தாண்டு தற்கொலை செய்துகொண்டனர்.

இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு நாளில் தமிழகத்தில் ரிதுஸ்ரீ, வைஷியா, மோனிஷா ஆகிய முன்று மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போது ரிதுஶ்ரீ, வைசியா. எளியவர்களுக்கு கல்வி மறுப்பு நீட் என்ற கொள்கையை சட்டமாகக் கொண்டிருக்கும் மத்திய அரசு, அதை தடுக்க பலமில்லாத மாநில அரசு, இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாம், இவர்கள் தான் இதை நிகழ்த்தியவர்கள்!” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் இந்த கருத்துக்கு நடிகை காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நீங்கள் எடுக்கும் படம் தோல்வி அடைந்தால், அதை சிறப்பாக எடுப்பதற்கு முயற்சி செய்வீரகளா அல்லது படத்தை தடை செய்ய போராட்டம் நடத்துவீர்களா என கேட்டுள்ளார்.

காயத்ரி ரகுராம் இந்த பதிலுக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அரசியல் புரிதல் இல்லதா ஒரு கருத்து என விமர்சனம் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories