வைரல்

தேர்தல் தோல்வி.. தலைவர் பதவி விலகல்.. டென்ஷன் ப்ரீ ராகுல் காந்தி : காரில் ஜாலி ரவுண்ட்-அப்

தேர்தல் தோல்வி.. தலைவர் பதவி விலகல்.. டென்ஷன் ப்ரீ ராகுல் காந்தி : காரில் ஜாலி ரவுண்ட்-அப்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மக்களவை தேர்தலில் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி முடிவெடுத்தார். இதை காங்கிரஸ் கட்சியினர் ஒத்துக் கொள்ளவில்லை. தேர்தல் தோல்விக்கு பின்னர் ராகுல் காந்தி பொது வெளியில் அவ்வளவாக தலைகாட்டவில்லை.

இந்நிலையில், டெல்லி துக்ளக் சாலையில் உள்ள தமது இல்லத்தில் இருந்து காரில், நாயுடன் ராகுல் பயணித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. காரை ராகுல் ஓட்ட, அவரது நாய் மட்டுமே உடன் செல்லும் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை அணில் சர்மா என்பவர் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். ராகுல் காந்தி வளர்த்து வரும் நாயின் பெயர் பிடி என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories