தமிழ்நாடு

அரசு பணியை தனியார் மயமாக்க சதி : தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு துரோகம் செய்த த.வெ.க அரசு - பகீர் தகவல்!

ஒப்பந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறுவது தமிழக இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா..!

அரசு பணியை தனியார் மயமாக்க சதி : தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு துரோகம் செய்த த.வெ.க அரசு - பகீர் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
S Muthukrishnan
Updated on

“அரசு பணி என்பது தனியார் நிறுவனங்களின் வியாபாரமா? இளைஞர்களின் உழைப்பு என்பது ஒப்பந்த நிறுவனங்களின் வர்த்தகப் பொருளா?’’ என்று அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில் தவெக அரசுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழில்நுட்பக் கல்வி முடித்து விட்டு அரசு வேலைக்காக இரவு பகலாக படித்து போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தின் நம்பிக்கையை சுமந்து போட்டித் தேர்வுகளை எதிர்கொள்கிறார்கள். அவர்களுடைய கனவு என்ன?

ஒரு நிரந்தர அரசு வேலை! கண்ணியமான ஊதியம். சமூக பாதுகாப்பு! குடும்பத்திற்கு ஒரு எதிர்காலம். அந்தக் கனவுகளை சிதைக்கும் வகையில், தமிழ்நாடு அரசு பணிகளில் ஒப்பந்த பணியாளர் முறையை தீவிரமாக அமல்படுத்தும் வகையில் தவெக அரசு அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை அக்டோபர் 21 ஆம் தேதியிட்ட, தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

அரசு பணியை தனியார் மயமாக்க சதி : தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு துரோகம் செய்த த.வெ.க அரசு - பகீர் தகவல்!

அதில், ’’தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை (Overseas Manpower Corporation Limited - OMCL ) அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி ஆட்களை அவுட்சோர்சிங் (Outsourcing) முறையில் வழங்கும் முகமையாக நியமிக்கிறது’’ என்று கூறியிருக்கிறது.

அரசுத் துறைகளில் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்றால், காலிப்பணியிடங்களை முறையாக அறிவித்து, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வெளிப்படையாக போட்டித் தேர்வு, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நியமனம் செய்ய வேண்டும். ஆனால், தவெக அரசு சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் வகையில் செயல்படுகிறது.

அரசின் ஒரே அலுவலகத்தில் ஒரே வேலை செய்யும் ஒருவர் நிரந்தர பணியாளர்; மற்றொருவர் ஒப்பந்தப் பணியாளர்! ஒருவருக்கு உரிய ஊதியமும் பணி பாதுகாப்பும் உண்டு. மற்றொருவருக்கு நிலையற்ற பணியும் எதிர்காலம் குறித்த அச்சமும் இருந்து கொண்டே இருக்கும். இந்த வேறுபாடு அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களின் கனவுகளை சிதைத்து விடாதா..?

அரசு பணியை தனியார் மயமாக்க சதி : தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு துரோகம் செய்த த.வெ.க அரசு - பகீர் தகவல்!

அரசாங்கம் என்பது நிரந்தர வேலைவாய்ப்பு கொடுக்கும் அமைப்பாக இருக்க வேண்டும். நிரந்தர வேலைவாய்ப்புகளை ஒப்பந்த வேலை வாய்ப்புகளாக மாற்றி இளைஞர்களின் எதிர்காலத்தை நிலையற்றதாக மாற்றி விடக்கூடாது. தமிழக இளைஞர்கள், கேட்பது தங்களது கல்விக்கும் உழைப்புக்கும் தகுதியான நிரந்தர வேலைவாய்ப்பு.

அரசுத்துறைகளில் தனியார் முகவர்களின் ஆதிக்கத்திற்கு பதிலாக அரசின் நேரடி வேலைவாய்ப்பு விரிவுப்படுத்த வேண்டும். நிரந்தர அரசு வேலை என்பது தமிழக இளைஞர்களின் உரிமை சார்ந்த எதிர்பார்ப்பு; அதை ஒப்பந்தப் பணியாளர் முறைக்குள் சுருக்கி விடக்கூடாது!

’’இளைஞர்களுக்கு 5 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள்; 5 லட்சம் இளைஞர்களுக்கு உள்ளாட்சி அளவில் வேலைவாய்ப்புகள்’’ என்று தவெக தேர்தல் வாக்குறுதி கொடுத்து விட்டு, இப்போது, ஒப்பந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறுவது தமிழக இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா..!

banner

Related Stories

Related Stories