தமிழ்நாடு

“துப்பில்லாத ஆட்சியில் பெப்பர் ஸ்பிரேயாவது பெண்களைப் பாதுகாக்கட்டும்” : கனிமொழி எம்.பி. விமர்சனம்!

கேடுகெட்ட த.வெ.க ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

“துப்பில்லாத ஆட்சியில் பெப்பர் ஸ்பிரேயாவது பெண்களைப் பாதுகாக்கட்டும்” : கனிமொழி எம்.பி. விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

த.வெ.க ஆட்சியில் அதிகரித்துள்ள சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழல், விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து இன்று (அக்.31) தமிழ்நாடு முழுவதும் தி.மு.க மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

அப்போது பேசிய கனிமொழி எம்.பி ”விஜய்க்கு வாக்களித்த பெண்களும் இளைஞர்களும், 'தவறாக வாக்களித்துவிட்டோமே' என வருத்தப்பட்டு வருகிறார்கள். இன்று பெண்கள் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கிவிட்டார்கள். நிச்சயம் மாற்றம் வரும்; விரைவிலேயே மாற்றம் வரும்.

'தெறி' படத்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டவனைப் பாலத்தில் கட்டித் தொங்கவிட்டுவிடுவார் விஜய். இதேபோல் விஜய் ஆட்சிக்கு வந்தால் 'தெறிக்க விட்டுவிடுவார்' என்று நம்பித்தான் ஆட்சிக்குக் கொண்டுவந்தனர். ஆனால், இன்று பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களைப் பாலங்களுக்கு அடியில் கட்ட வேண்டும் என்றால், அவர்கள் கட்சியைச் சேர்ந்தவர்களைத்தான் கட்டி வைக்க வேண்டும்.

இரண்டரை வயதுக் குழந்தைக்குப் பா*யல் வ*கொடுமை செய்யக்கூடியவர்களை எல்லாம் கட்சியில் நிர்வாகியாக வைத்திருக்கும் ஒரு மனிதாபிமானமற்ற கட்சி எதுவென்றால், அது த.வெ.க.தான்.

போதை இல்லாத் தமிழ்நாட்டை உருவாக்குவேன்' எனச் சொன்ன விஜய்யின் கட்சி நிர்வாகி வீட்டிலிருந்துதான் 135 கிலோ 'மெத்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் நினைத்தோம் பிளாக் டிக்கெட் விற்றுக்கொண்டிருந்தார்கள் என்று. ஆனால், அவர்கள் வேறு எதையோ விற்றுக்கொண்டிருந்தார்கள்.

த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு 700 கொ*கள் ; பெண்களுக்கு எதிரான வ*முறைகள் 400 சம்பவங்கள் நடந்துள்ளன. இதுதான் பாதுகாப்பை உருவாக்கக்கூடிய லட்சணமா?

எதிர்க்கட்சிகளையும், தி.மு.க.வினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து, டீ வாங்கிக் கொடுத்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறது காவல்துறை. இப்படித் தமிழ்நாடு முழுவதிலும் காவல்துறை பிசியாக இருக்கிறது. இதனால் சிறையிலிருந்து குற்றவாளிகள் தப்பிச் செல்வது அவர்களுக்குத் தெரியவில்லை. 50-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

நண்பா, நம்பிஸ்... விஜய் மாமாவுக்கு ஓட்டுப்போடச் சொல்லுங்க என்று சொன்னீர்களே... இன்று அந்தக் குழந்தைகளுக்குக்கூடப் பாதுகாப்பு வழங்க முடியாத ஒரு துப்பற்ற ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார் விஜய்.

குழந்தைகள் கடத்தப்பட்டு விற்கப்படக்கூடிய தலைநகராகத் தமிழ்நாடு மாறிக்கொண்டிருக்கிறது என்று பத்திரிகைகள் எழுதுகின்றன. இந்த அளவிற்குத் தமிழ்நாடு இன்று மோசமாகியுள்ளது. இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும்.

குழந்தைகளுக்கு நீங்கள் மோதிரமெல்லாம் போட வேண்டாம். எங்களுடைய குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். நீங்கள் அண்ணன் சீர் எல்லாம் கொடுக்க வேண்டாம்; அதற்குப் பதில் பெப்பர் ஸ்பிரே கொடுங்கள். இந்தத் துப்பில்லாத ஆட்சியில் அதுவாவது பெண்களைப் பாதுகாக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories