வைரல்

கருத்துக்கணிப்பு முடிவுகள் கார்ப்பரேட் ஊடகங்களுக்கு லாபம் தரும் தொழில் -நிபுணர்கள் கருத்து

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு (Exit Poll) என்பது பங்கு சந்தையின் மதிப்புகளை உயர்த்தவும், ஆளும்கட்சியின் போலி பிம்பத்தை வளர்க்கவும் மட்டுமே உதவும் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

கருத்துக்கணிப்பு முடிவுகள் கார்ப்பரேட் ஊடகங்களுக்கு லாபம் தரும் தொழில் -நிபுணர்கள் கருத்து
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

2019 நாடாளுமன்றத்தேர்தல் குறித்து, வாக்குப்பதிவுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளின் முடிவுகள், பா.ஜ.க.,வுக்கு ஆதரவாக வந்துள்ளன. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளால், இந்திய பங்குச் சந்தையில் குறிப்பிட்ட நிறுவனங்களின் விலை அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி சென்செக்ஸ் 962.12 புள்ளிகள் ஏற்றம் கண்டு 38,892.89 புள்ளிகளில் நிலை கொண்டுள்ளது. நிஃப்டியைப் பொறுத்தவரையில், 286.95 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,694 புள்ளிகளில் நிலை கொண்டுள்ளது. வங்கித் துறை, நிதி சேவைத் துறை, வாகனத் துறை மற்றும் உலோகத் துறைகளின் பங்குகள் இன்று ஏற்றம் கண்டுள்ளன.

கருத்துக்கணிப்பு முடிவுகள் கார்ப்பரேட் ஊடகங்களுக்கு லாபம் தரும் தொழில் -நிபுணர்கள் கருத்து

நேற்று மாலை 7ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்ததற்குப் பிறகு, வெளியான கருத்துகணிப்பு முடிவுகளை அடுத்து உயர்ந்த சென்செக்ஸ் புள்ளிகள் தற்பொழுது வரை நீடித்து வருகிறது. இது இன்னும் இரண்டு நாட்களுக்குத் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கணிப்புகள் எல்லாம், பங்கு சந்தையின் மதிப்புகளை உயர்த்தவும், கட்சி சார்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊடக விளம்பரங்களுக்காக மட்டுமே வெளியிடப்பட்டு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் மற்றும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொருளாதார நிபுணரான வெங்கடேஷ் ஆத்ரயா அவரது முகநூலில் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “வாக்களிப்பு முடிந்த பிறகு வாக்கு சாவடிகளில் இருந்து வெளிவரும் வாக்காளர்களிடம் அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்று கேட்டு இவ்வழியில் தேர்தல் முடிவுகளை கணிப்பதை தேர்தலுக்குப் பிந்தைய (Exit Poll) கருத்துகணிப்பு என்று அழைக்கின்றனர். நமது நாட்டில் இத்தகைய கருத்துகணிப்புகள் அறிவியல் பூர்வமான முறையில் செய்யப்படுவதில்லை. இதனால் அவை நம்பகத்தன்மை அற்றதாகவே உள்ளன.

தொடர்ந்து ஒவ்வொரு முறையும் சட்டமன்ற தேர்தல்களிலும் சரி, மக்களவைத் தேர்தல்களிலும் சரி, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்புகளின் முடிவுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டும் அனேகமாக அனைத்துமே தவறாகவும் வந்தவண்ணம் உள்ளன. எனினும் இது ஒரு பெரும் வியாபாரமாகவும் லாபம் தரும் தொழிலாகவும் உள்ளது.

முகவர்களுக்கும் ஸ்பான்சர் செய்யும் தொலைகாட்சிகளுக்கும் பெருத்த விளம்பரத்தை தேடித்தருகின்றன. எனவே, சுருக்கமாக சொன்னால், இந்தக் கருத்துக்கணிப்புகளை புறந்தள்ளிவிட்டு மே 23ம் தேதி வரை காத்திருப்பதே சரி. இதனால், தேவையற்ற மன உளைச்சல்களை தவிர்க்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமூக செயற்பாட்டாளரான எவிடன்ஸ் கதிர் தனது முகநூல் பக்கத்தில், “கருத்துkகணிப்பு வெளியிட்டு உள்ள பெரும்பாலான ஊடகங்கள் மதவாத/ கார்பெர்ட் சார்பு உடைய ஊடகங்கள். ஒருவேளை கருத்துக்கணிப்பு உண்மையானால் அந்த ஊடகத்தின் திறனை வெளிப்படையாக பாராட்டுகிறோம். பொய்த்துப்போனால் கம்பெனியை மூடுவதுதான் நியாயம்.பார்ப்போம் என்ன நடக்கிறது என்று?” தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.,வுக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதானி நிறுவனத்தின் பங்குகள் இன்று அதிக அளவு ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “கருத்துக்கணிப்பு முடிவுகள் எப்படியாக இருந்தாலும், நான் அதை நம்புவதில்லை. மே 23ம் தேதி வரை காத்திருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories