வைரல்

நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை! பேரறிவாளனுக்கு ஏன் இல்லை? ஆர்.டி.ஐ அதிர்ச்சி தகவல்

குண்டுவெடிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் முன்கூட்டியே விடுதலை என சிறையில் உள்ள பேரறிவாளன் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ ல் நிரூபணமாகியுள்ளது.

நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை! பேரறிவாளனுக்கு ஏன் இல்லை? ஆர்.டி.ஐ அதிர்ச்சி தகவல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குண்டுவெடிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறை இருந்த நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை என ஆர்.டி.ஐ மூலம் தகவல் தெரியவந்துள்ளது. இது குறித்து பேரறிவாளன் வழக்கறிஞர் விளக்கமளித்துள்ளனர்.

1993ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர் குண்டுவெடிப்பில் உரிய ஆவணமின்றி ஆயுதம் வைத்திருந்ததாக நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். நடிகர் சஞ்சய் தத் மீதான வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்தில் அவருக்கு 5 ஆண்டுகளாக தண்டனை குறைக்கப்பட்டது. நடிகர் சஞ்சய் தத் கடந்த ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி மும்பை சிறையிலிருந்து தண்டனை முடிவதற்கு முன்பே விடுதலை செய்யப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 8 மாதங்களுக்கு மேலாகியும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றாரா என ஆர்.டி.ஐயில் தகவல் கோரப்பட்டது. ஆர்.டி.ஐ தகவலின் படி நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் ஒப்புதல்பெறவில்லை என பேரறிவாளன் தரப்பு தகவல் கூறுகின்றனர். சஞ்சய் தத்தை விடுவிக்கும் முன்பு மகாராஷ்டிர அரசு மத்திய அரசிடம் கருத்தை கேட்கவில்லை என பேரறிவாளன் தரப்பு கூறியுள்ளது.

banner

Related Stories

Related Stories