வைரல்

மோடியை விமர்சித்து கட்டுரை எழுதிய செய்தியாளர் குறித்து தவறான தகவல் பரப்பிய பா.ஜ.க.வினர்! 

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்து டைம் இதழில் கட்டுரை எழுதியிருந்த செய்தியாளர் ஆதிஷ் தஸீரை குறித்து விக்கிப்பீடியா பக்கத்தில் தவறான தகவல்களைச் சேர்ந்து பா.ஜ.கவினர் அவதூறு ஏற்படுத்தினர்.

மோடியை விமர்சித்து கட்டுரை எழுதிய செய்தியாளர் குறித்து தவறான தகவல் பரப்பிய பா.ஜ.க.வினர்! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அமெரிக்காவின் புகழ் பெற்ற செய்தி இதழான 'டைம்', இந்த மாதத்திற்கான கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 'பிளவுவாதிகளின் தலைவர்' என்ற பெயரில் அட்டைப்பட கட்டுரையாக வெளியிட்டுள்ளது. இது தேர்தல் நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.அந்த கட்டுரையை ஆதீஷ் தஸீரின் என்பவர் எழுதியிருந்தார்.

கட்டுரையை எழுதிய ஆதிஷ் தஸீரை காங்கிரஸின் ஊடகத் தொடர்பாளர் எனக் குறிப்பிட்டு, டைம் இதழ் அதனுடைய நம்பகத்தன்மையை இழந்து இடதுசாரிகளின் ஊதுகுழலாக மாறிவிட்டதாக சவுகித்தார் சாஸ் என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். அத்துடன் ஆதிஷ் தஸீரின் விக்கிப்பீடியா பக்கத்தில் இருந்து ஒரு ஸ்க்ரீன்ஷாட்டை அவர் இணைத்திருந்தார்.

அந்த ட்வீட் பலரால் இது மறுபதிவிடப்பட்டது. சுமார் மூன்றரை மணிநேரம் அவர் காங்கிரஸ் ஊடகப் பொறுப்பாளர் என்றும், அவருடைய புத்தகங்கள் பிராமணர்களை இழிவுப்படுத்துவதாகவும் அவருடைய விக்கிப்பீடியா பக்கத்தில் சேர்க்கப்பட்டுக் கொண்டே இருந்தன. கட்டுரை எழுதியவர் பாகிஸ்தானி என்றும் பதிவிட்டனர்.

நேற்று காலையிலிருந்து மட்டும், ஆதிஷ் தஸீரினின் விக்கிப்பீடியா பக்கத்தில் 78 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதனையடுத்து, ஆதிஷ் தஸீரின் விக்கிப்பீடியா பக்கத்தில் யாரும் திருத்தங்களை செய்ய முடியாதபடி, மாற்றப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories