வைரல்

இலங்கையில் இந்திய பத்திரிக்கையாளர் கைது!

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, இது குறித்து விசாரிக்க சென்ற இந்திய பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இந்திய பத்திரிக்கையாளர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இலங்கையில் ஈஸ்டர் அன்று, தேவாலயங்கள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், 253 பேர் பலியானார்கள். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர்.

பத்திரிகையாளர் சித்திக் அகமது டேனிஷ்.
பத்திரிகையாளர் சித்திக் அகமது டேனிஷ்.

இந்தியாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் சித்திக் அகமது டேனிஷ். இவர் ராய்ட்டர்ஸ் பத்திரிக்கை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் தற்காலிகமாக இலங்கையில் தங்கி தாக்குதல்கள் தொடர்பான தகவல் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில் நீர்கொழும்புவில் உள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஒருவன் குண்டு வெடிப்பில் உயிரிழந்தான். மேலும் இது குறித்து பள்ளி மேலாளர்களிடம் விசாரிக்க வேண்டும் என கூறி தடையை மீறி உள்ளே சென்றுள்ளார்.

சித்திக்கின் இந்த செயல் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பள்ளிக்கு உடனடியாக விரைந்த போலீசார், அனுமதியுமின்றி பள்ளி வளாகத்திற்குள் நுழைய முயன்ற சித்திக்கை கைது செய்தனர். பின்னர் சித்திக்கை கோர்ட்டில் போலீசார் ஆஜர் படுத்தினர். சித்திக் வருகின்ற மே 15ம் தேதி வரை போலீசார் கஸ்டடியில் இருக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories