வைரல்

நிலவில் பயணிக்க வாகனம் தயாரிக்கும் டொயோட்டோ !  

உலகளவில் பிரபலமான வாகன நிறுவனமான டொயோடா, ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்துடன் சேர்ந்து நிலவில் பயணிக்கும் வகையில் புதிய ரோவர் வகை வாகனத்தை வடிவமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

toyota moon rover
twitter toyota moon rover
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலகளவில் பிரபலமான வாகன நிறுவனமான டொயோடா, ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்துடன் சேர்ந்து நிலவில் பயணிக்கும் வகையில் புதிய ரோவர் வகை வாகனத்தை வடிவமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக JAXA மற்றும் டொயோடா ஆகிய நிறுவனங்கள் இடையே ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.

இந்த வாகனம் 2 பேர் பயணிக்கும் வகையில் இருக்குமெனவும், அதேசமயம் அவசர காலங்களில் 4 பேர் வரை பயணிக்கும் வகையிலும் இந்த வாகனம் வடிவம் இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வாகனம், 6 மீட்டர் நீளம், 5.2 மீட்டர் அகலம் மற்றும் 3.8 மீட்டர் உயரமும் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க சூரிய ஒளியால் இயங்கும் வகையில் இந்த வாகனம் இருப்பதாகவும், இந்த வாகனம் தொடர்ந்து 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கக்கூடியவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரும், அமேசான் நிறுவனத்தின் தலைவருமான ஜெஃப் பிசோஸ் விண்வெளிக்கு சுற்றுலா சென்று வரக்கூடிய வகையில் ப்ளூ ஆர்ஜின் என்ற திட்டத்தை வடிவமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories