தமிழ்நாடு

காதல் விவகாரம் : நாதக நிர்வாகிக்கு நேர்ந்த கொடுமை... தவெக நிர்வாகி தான் காரணமா? - கன்னியாகுமரியில் பரபர!

காதல் விவகாரம் தொடர்பாக நாதக நிர்வாகி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதல் விவகாரம் : நாதக நிர்வாகிக்கு நேர்ந்த கொடுமை... தவெக நிர்வாகி தான் காரணமா? -  கன்னியாகுமரியில் பரபர!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே வேர்க்கிளம்பி என்ற பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். நாம் தமிழர் காதசியை சேர்ந்த இவரது மூத்த மகள், தவெக நிர்வாகி கோவிந்த் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இவர்களது காதல் விவகாரம் கிறிஸ்டோபருக்கு தெரிய வர, தனது மகளை கண்டித்துள்ளார்.

மேலும் தனது மகளின் காதலன் தவெக நிர்வாகி கோவிந்த்தையும் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் இவரது மகள், தவெக நிர்வாகி கோவிந்துடன் வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. தனது மகளை வீட்டில் இருந்து காணவில்லை என்று பதற்றமடைந்த தந்தை கிறிஸ்டோபர், காதலன் கோவிந்த் வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று அவரது மகள் குறித்து கேட்டுள்ளார்.

தவெக நிர்வாகி கிறிஸ்டோபர்
தவெக நிர்வாகி கிறிஸ்டோபர்

அங்கே கிறிஸ்டோபர் மற்றும் கோவிந்த் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தவெக நிர்வாகி கோவிந்த், தனது காதலியின் தந்தை என்றும் பாராமல், தனது நண்பர்களும் சக தவெக நிர்வாகிகளுமான அஜின், ஆகாஷ் ஆகியோருடன் சேர்ந்து கிறிஸ்டோபரை கடுமையாக தாக்கி உள்ளனர். அவர்களின் பிடியில் இருந்து தப்பியோடிய கிறிஸ்டோபர், தான் வந்திருந்த பைக்கையும் மறந்துவிட்டு, வீட்டிற்கு நடந்தும், ஓடியும் சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த இவர் இந்த நிகழ்வு தொடர்பாக மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். எனவே தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் கிறிஸ்டோபர். நீண்ட நேரம் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்க்க, அங்கே அவர் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உள் மீது உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணையை தொடங்கியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியினர்
நாம் தமிழர் கட்சியினர்

இந்த சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சி குமரி நடுவண் மாவட்டச் செயலாளர் சீலன் தலைமையில் திருவட்டாறு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில், கிறிஸ்டோபர் இறப்புக்கு கோவிந்த் உட்பட 3 தவெக கட்சியை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் தாக்கியதே கிறிஸ்டோபர் தற்கொலைக்கு காரணம் என்றும், ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகளின் காதல் விவகாரம் தொடர்பாக நாதக நிர்வாகி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories