தமிழ்நாடு

“மாநில சுயாட்சி, உண்மையான கூட்டாட்சிக்கான தி.மு.க-வின் அறப்போர் தொடரும்” : மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

மாநில சுயாட்சி மற்றும் உண்மையான கூட்டாட்சிக்கான தி.மு.க-வின் அறப்போர் தொடர்ந்து நடைபெறும் என கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

“மாநில சுயாட்சி, உண்மையான கூட்டாட்சிக்கான தி.மு.க-வின் அறப்போர் தொடரும்” : மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய அரசியலமைப்புச் சட்ட தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1949-ஆம் ஆண்டு இதே நாளில் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையால் நமது அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில்,மாநில சுயாட்சி மற்றும் உண்மையான கூட்டாட்சிக்கான தி.மு.க-வின் அறப்போர் தொடர்ந்து நடைபெறும் என கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவு வருமாறு:-

பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில், சமத்துவத்தை உறுதிசெய்து சமூக நீதிக்கான அடித்தளத்தை அமைத்த அரசியலமைப்புச் சட்டத்தை 1949-ஆம் ஆண்டு இதே நாளில் இந்தியா ஏற்றுக்கொண்டது.

சமூகத்தில் மாறிவரும் தேவைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ப 'உயிர்ப்புள்ள ஆவணமாக' நமது அரசியலமைப்பை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் வடிவமைத்தார். இந்த அரசியலமைப்புதினத்தில், நமது அரசியலமைப்பின் முற்போக்கான கொள்கைகளைப் பாதுகாக்கவும், அதன் கூட்டாட்சித் தன்மையை மேலும் வலுப்படுத்தவும் நாம் உறுதியேற்போம்.

நமது அரசியலமைப்புப் பயணத்தின் 75 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக மாற்றுவதற்கு ஒரு விரிவான மறுஆய்வு அவசியமாகிறது. இந்த நோக்கத்துடன் தான், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த உயர்மட்டக் குழுவை நமது திராவிடமாடல் அரசு அமைத்தது.

தற்போதைய ஆட்சியாளர்கள் அக்குழுவைக் கலைக்க முடிவு செய்திருந்தாலும், மாநில சுயாட்சி மற்றும் உண்மையான கூட்டாட்சிக்கான தி.மு.க-வின் அறப்போர் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories