தமிழ்நாடு

அரை மணி நேரம் மின்வெட்டு: டார்ச் வெளிச்சத்தில் ஆய்வு மேற்கொண்ட வன்னியரசு!

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அமைச்சர் வன்னியரசு ஆய்வின்போது ஏற்பட்ட மின்தடையால் பரபரப்பு ஏற்பட்டது.

அரை மணி நேரம் மின்வெட்டு: டார்ச் வெளிச்சத்தில் ஆய்வு மேற்கொண்ட வன்னியரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

த.வெ.க. ஆட்சி அமைந்த நாளில் இருந்து தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து வருகிறது. "கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை" என்ற கதையாக, மின்வெட்டே இல்லை என அபாண்டமாகப் பொய் சொல்லி வருகிறது த.வெ.க. அரசு.

அமைச்சர்கள் நிர்மல்குமார், செங்கோட்டையன் உட்படப் பல அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளிலும் ஆய்வுகளிலும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இருந்தும், மின்வெட்டே இல்லை எனக் கூறி நாடகமாடி வருகிறார்கள்.

இந்நிலையில், த.வெ.க. கூட்டணியில் இருக்கும் வி.சி.க. அமைச்சர் வன்னியரசு ஆய்வு செய்தபோதும் அரை மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (நவ. 25) காலை முதல் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் சமூகநீதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வன்னியரசு கலந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து, பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் சமூகநீதி மாணவியர் விடுதியில் அவர் இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விடுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டது. அரை மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டிருந்த நிலையிலும், அமைச்சர் வன்னியரசு செல்போன் டார்ச் வெளிச்சத்திலேயே விடுதி முழுவதும் ஆய்வு செய்தார்.

மேலும், சமையலறைக்குச் சென்ற அவர் டார்ச் வெளிச்சத்தில் மாணவிகளுக்காகத் தோசை சுட்டுப் பரிமாறினார். பின்னர் விடுதி மாணவிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களுடன் அமர்ந்து இரவு உணவு அருந்தினார். அமைச்சரின் ஆய்வின்போது ஏற்பட்ட இந்த மின்தடைச் சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

banner

Related Stories

Related Stories