தமிழ்நாடு

“ஒன்றிய அரசின் வாயைப்பார்த்து உட்கார்ந்திருக்கும் பட்டுவேட்டி பண்ணையார் அரசு” : DMK Youth Wing விமர்சனம்!

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம்; கோட்டை விட்ட பனையூர் பட்டுவேட்டி பண்ணையார் அரசு என தி.மு.க இளைஞர் அணி விமர்சனம் செய்துள்ளது.

“ஒன்றிய அரசின் வாயைப்பார்த்து உட்கார்ந்திருக்கும் பட்டுவேட்டி பண்ணையார் அரசு” : DMK Youth Wing விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய அரசு எந்த வகையிலும் தமிழ்நாட்டின் கோரிக்கையை தட்டிக்கழிக்க முடியாத இடம்தான் பரந்தூர் விமான நிலைய திட்டம். அதை முட்டாள்தனமாக கைவிட்டுவிட்டு ஒன்றிய அரசின் வாயைப்பார்த்து உட்கார்ந்திருக்கிறது பனையூர் பட்டுவேட்டி பண்ணையார் அரசு என தி.மு.க இளைஞர் அணி விமர்சித்துள்ளது.

இது குறித்து தி.மு.க இளைஞர் அணி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ”சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதில் த.வெ.க அரசின் திட்டமிடல் குறைபாடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு மூடுவிழா நடத்திய விஜய் அரசு, கும்மிடிப்பூண்டி, செய்யூர் ஆகிய இரண்டு இடங்களைத் தேர்வு செய்துவிட்டு, அவற்றுக்கான சாத்தியக்கூறு ஆய்வை நடத்த இந்திய விமான நிலைய ஆணையத்திடமும், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடமும் அனுமதி கோரிக் காத்திருக்கிறது. செப்டம்பரில் அனுப்பிய கடிதத்திற்கே இதுவரை பதில் இல்லை என்பது மாநிலத்தின் முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டத்தின் மீதான அலட்சியத்தைக் காட்டுகிறது.

கும்மிடிப்பூண்டி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திற்கு அருகிலும், செய்யூர் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு அருகிலும் இருப்பதால் பாதுகாப்பு மற்றும் அனுமதிச் சிக்கல்கள் எழலாம் என்பது முன்கூட்டியே ஆராயப்பட்ட அம்சமல்லவா? இத்தகைய கட்டுப்பாடுகளை முழுமையாக மதிப்பீடு செய்யாமல் இடங்களைத் தேர்வு செய்தது ஏன்?

ஒன்றிய அரசு எந்த வகையிலும் தமிழ்நாட்டின் கோரிக்கையை தட்டிக்கழிக்க முடியாத இடம்தான் பரந்தூர் விமான நிலைய திட்டம். அதை முட்டாள்தனமாக கைவிட்டுவிட்டு ஒன்றிய அரசின் வாயைப்பார்த்து உட்கார்ந்திருக்கிறது பனையூர் பட்டுவேட்டி பண்ணையார் அரசு. ‘எங்கள் தலைவரின் முதல் போராட்டமே பரந்தூர் திட்டத்திற்கு எதிராகத்தான். எனவே, அதை செயல்படுத்த மாட்டோம்’ என்கிறார் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த். விமானநிலைய அனுமதியை வேண்டி, அவ்விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு நேரடி போட்டியாளராக இருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த ஒன்றிய விமானப்போக்குவரத்து அமைச்சர் கிஞ்ராப்பு ராம் மோகன் நாயுடுவிடம்தான் போய் நிற்கிறார் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா.

டெல்லியின் பதிலுக்காகக் காத்திருப்பதா, சென்னையின் எதிர்கால வளர்ச்சிக்காகச் செயல்படுவதா? மாநில உரிமையைப் பேசவேண்டிய இந்த கோமாளி அரசு, அதை நிலைநாட்டுவதற்கான நிர்வாகத் திறனையும் பொறுப்புணர்வையும் செயல்பாட்டில் நிரூபிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories