அரசியல்

“நம் மண்ணில் வ.உ.சி பதித்த கொள்கைத் தடம் என்றும் அழியாது!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

“நம் நாட்டின் விடுதலைக் கனவுகளுக்குத் திசைகாட்டிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்குப் புகழ்வணக்கம்!”

“நம் மண்ணில் வ.உ.சி பதித்த கொள்கைத் தடம் என்றும் அழியாது!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் புலமை பெற்ற எழுத்தாளராகவும், வழக்கறிஞராகவும், தொழிற்சங்கத் தலைவராகவும் விளங்கிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவுநாளையொட்டி (நவ.18), தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு பின்வருமாறு:

நம் நாட்டின் விடுதலைக் கனவுகளுக்குத் திசைகாட்டிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்குப் புகழ்வணக்கம்!

சுதேசிக் கப்பலைச் செலுத்தியவர்!

உழைக்கும் மக்களின் உரிமைக்காகக் குரல்கொடுத்தவர்!

“நம் மண்ணில் வ.உ.சி பதித்த கொள்கைத் தடம் என்றும் அழியாது!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

செக்கிழுத்துச் சிதைக்கப்பட்டபோதும் சிந்தனையில் சுதந்திரத்தைச் சுமந்தவர்!

சிறைக்கொட்டடியிலும் செந்தமிழைச் செழிக்கச் செய்தவர்!

நமது திராவிட மாடல் அரசில், அத்தகைய தியாகச் செம்மலின் புகழைப் போற்றி, அவரது சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம்! அந்த முயற்சிகளுக்குத் தற்போதுள்ள ‘U-Turn’ அரசில் எக்காரணம் கொண்டும் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது.

நம் மண்ணில் அவர் பதித்த கொள்கைத் தடம் காலத்தால் என்றும் அழியாது!

banner

Related Stories

Related Stories