தமிழ்நாடு

“காவிரி விவகாரம் பற்றி முதலமைச்சர் விஜய்க்கு ஒன்றும் தெரியாது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சாடல்!

"சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளேன்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“காவிரி விவகாரம் பற்றி முதலமைச்சர் விஜய்க்கு ஒன்றும் தெரியாது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காவிரி விவகாரம் மற்றும் மேகதாது அணைப் பிரச்சினை குறித்துத் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எதுவும் தெரியாது என்றும், அதனால் தான் அவர் இந்த விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் மௌனம் காக்கிறார் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மக்களின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் விஜய் இதுவரை எதற்காவது பதில் சொல்லியுள்ளாரா? இதனைப் பத்திரிகையாளர்களாகிய நீங்கள்தான் அவரிடம் கேட்க வேண்டும்.

காவிரி விவகாரம் குறித்து முதலமைச்சருக்கு ஒன்றும் தெரியாது; அதனால்தான் அவர் இதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் இதுவரை எங்கு போய், என்ன பேசியுள்ளார்?

இவ்வாறு அவர் பேசினார்

பின்னர், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளேன்.

விழாவிற்கான முறையான அழைப்பிதழ் எனக்கு நேரடியாக வரவில்லை என்றாலும், ராகுல் காந்தியின் தரப்பிலிருந்து என்னுடைய உதவியாளரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார்கள். அதன் அடிப்படையிலேயே நான் என்னுடைய வாழ்த்துக் கடிதத்தை அனுப்பி வைத்தேன்" என்று மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

banner

Related Stories

Related Stories