தமிழ்நாடு

ரூ.35.79 கோடி சொத்துக் குவிப்பு புகார்: த.வெ.க நிர்வாகி சி.விஜயபாஸ்கருக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்!

சி.விஜயபாஸ்கருக்கு வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறப்படும் ரூ.35.79 கோடி வழக்கில் அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

ரூ.35.79 கோடி சொத்துக் குவிப்பு புகார்: த.வெ.க நிர்வாகி சி.விஜயபாஸ்கருக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
S Muthukrishnan
Updated on

விஜயபாஸ்கர் நவம்பர் 18 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் அவரது மனைவி ரம்யா நவம்பர் 19 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

வழக்கின் பின்னணி : அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். அவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2021 ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோரின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடைபெற்றது. குற்றப்பத்திரிகையில் சட்டவிரோதமாக ரூ.35.79 கோடி, சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசின் அமலாக்கத்துறை 2024 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தியது. சட்ட விரோதமாக சம்பாதித்த பணம் எங்கே சென்றது? என்று விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA – Prevention of Money Laundering Act, 2002 ) கீழ் அமலாக்கத்துறை தனியாக விசாரணை நடத்துகிறது. அமலாக்கத்துறை வழக்கில் கடந்த நவம்பர் 6 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், இருவரும் ஆஜராகவில்லை.

இதையடுத்து, அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இம்முறை விஜயபாஸ்கர் நவம்பர் 18 ஆம் தேதியும் அவரது மனைவி ரம்யா, நவம்பர் 19 ஆம் தேதியும் விசாரணைக்கு வர உத்தரவிட்டப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறையிடம் தப்பிக்க த.வெ.க வில் சரண்டர் ஆன விஜயபாஸ்கர் இப்போது, அமலாக்கத்துறையிடம் என்ன சொல்லப் போகிறார்?

banner

Related Stories

Related Stories