தமிழ்நாடு

கழுத்து, இதயம், நுரையீரல், முதுகு… காயங்களுடன் பிணமான பாலகிருஷ்ணன் - த.வெ.க அரசின் காட்டுத் தர்பார்!

மதுரை, செக்கானூரணி காவல் நிலையக் கழிப்பறையில் தூக்கியல் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கழுத்து, இதயம், நுரையீரல், முதுகு… காயங்களுடன் பிணமான பாலகிருஷ்ணன் - த.வெ.க அரசின் காட்டுத் தர்பார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
S Muthukrishnan
Updated on

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் ஏலக்காய் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்காக நவம்பர் 13 ஆம் தேதி மதுரை செக்கானூரணி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மறுநாள் காலை, காவல் நிலையக் கழிப்பறையில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்க்கப்பட்டார். காவல் நிலையத்தில் அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

உடலை பெற்றுக்கொள்ள மறுத்த அவர்கள், கொலை வழக்கு பதிவு செய்து காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், சி.பி.ஐ விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் டிரைவர் பாலகிருஷ்ணனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலகிருஷ்ணன் கழுத்தில் 27 செ.மீ. நீளத்தில் கயிற்றால் ஏற்பட்ட தடம், முதுகுப் பகுதியில் ஐந்து இடங்களில் ரத்தக்கசிவுடன் கூடிய காயங்கள், கழுத்தின் வலது புறத்தில் குத்து காயங்கள் இருந்துள்ளன. மேலும், உடலின் பல இடங்களில் வெளிப்புற, உட்புற காயங்கள் இருந்ததும் பதிவாகியுள்ளது.

அவது மூளை 1,400 கிராம் எடையுடன் வீங்கியிருந்ததாகவும், இதயம் சற்று பெரியதாக இருந்ததாகவும், இரண்டு நுரையீரல்களிலும் வீக்கம், இதயத்தின் இடது அறையில் ரத்தக்கசிவு காணப்பட்டதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாக்கின் நடுப்பகுதியில் கடித்தது போன்ற தடங்களும் இருந்துள்ளன.

கழுத்து, இதயம், நுரையீரல், முதுகு… காயங்களுடன் பிணமான பாலகிருஷ்ணன் - த.வெ.க அரசின் காட்டுத் தர்பார்!

நவம்பர் 14 ஆம் தேதி இரவு 8.20 மணிக்கு தொடங்கிய பிரேத பரிசோதனை, இரவு 10.45 மணிக்கு நிறைவடைந்தது. மூன்று மருத்துவர்களைக் கொண்ட குழு பரிசோதனை நடத்தியது. உள்உறுப்புகளின் மாதிரிகள் வேதியியல் ஆய்வுக்கும், திசு மாதிரிகள் நுண்ணிய திசு ஆய்வுக்கும் அனுப்பப்பட்டன.

இந்த பிரேதபரிசோதனை அறிக்கையை சுட்டிக் காட்டியுள்ள பாலகிருஷ்ணனின் குடும்பத்தினர், ’’இது கொலைதான்; தற்கொலை அல்ல; நீதி வேண்டும். கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’ என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளர்.

’’மக்களை பாதுகாக்க வேண்டிய, காவல் துறையின் பாதுகாப்பில் டிரைவர் பாலகிருஷ்ணன் பிணமாகியிருக்கிறார். உடலில் பல காயங்களுடன் காவல் நிலையமே பிணக்கூடமாகியிருக்கிறது’’ என்பதுதான் பாலகிருஷ்ணன் குடும்பத்தினரின் முக்கிய குற்றச்சாட்டு.

போலீஸ் அதிகாரம் என்பது அடக்குமுறைக்கான உரிமம் அல்ல. யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது தான் த.வெ.க அரசின் கடமை. காவல் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா த.வெ.க அரசு?

banner

Related Stories

Related Stories