தமிழ்நாடு

ஆயுதங்களுடன் மறைந்திருந்த மர்ம கும்பல்.. விசிக பிரமுகருக்கு நேரந்த சோகம்.. தூத்துக்குடியில் பயங்கரம்!

தூத்துக்குடியில் விசிக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுதங்களுடன் மறைந்திருந்த மர்ம கும்பல்.. விசிக பிரமுகருக்கு நேரந்த சோகம்.. தூத்துக்குடியில் பயங்கரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட சோட்டையன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (40). விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த இவர், வி.சி.க.வின் முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் ஆவார். மேலும் சோட்டையன் தோப்பு பகுதியில் காய்கறி கடை நடத்தி வரும் இவர், வேன் ஓட்டுநராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்த சூழலில் இன்று (நவ.01) காலை நேரத்தில் மார்க்கெட்க்கு சென்று காய்கறிகளை வாங்கிவிட்டு தனது கடையில் காய்கறிகளை இறக்கி வைத்து விட்டு மீண்டும் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வருகை தந்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல், அவரை தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் தாக்க தொடங்கியுள்ளனர். அவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றும் முடியவில்லை என்பதால், அந்த கும்பல் அங்கையே வைத்து அவரை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளது. இதில் படுகாயமடைந்த பாலமுருகன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

ஆயுதங்களுடன் மறைந்திருந்த மர்ம கும்பல்.. விசிக பிரமுகருக்கு நேரந்த சோகம்.. தூத்துக்குடியில் பயங்கரம்!

இதையடுத்து இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பாலமுருகன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து விசாரித்ததில், அந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு டிஜிட்டல் பேனர் அமைப்பதில் ஏற்பட்ட தகராறு இந்த படுகொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, கொலை செய்யப்பட்ட பாலமுருகன் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தூத்துக்குடி - ராமேஸ்வரம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் கொலை நகரமாக மாறிய நிலையில், தற்போது தூத்துக்குடியிலும் தொடர் கொலை சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் 9 கொலைகள் நடைபெற்ற நிலையில் இன்று இந்த படுகொலை நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

banner

Related Stories

Related Stories