தமிழ்நாடு

அறிவுடைமையின் அருமை புரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில்.. : பேராசிரியர் கலையரசன் கைது - கனிமொழி கண்டனம்!

அறிவுடைமையின் அருமை புரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில் கலைஞர்களும் கல்வியாளர்களும் வஞ்சிக்கப்படுவார்கள்.

அறிவுடைமையின் அருமை புரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில்.. :  பேராசிரியர்  கலையரசன் கைது - கனிமொழி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

த.வெ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, அரசின் சட்ட விரோத நடவடிக்கைகள், மக்கள் விரோத செயல்களை பற்றி விமர்சித்தால் அவர்கள் மீது வழக்கு பாய்வது வாடிக்கையாகி வருகிறது. பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் நோக்கில் பல செயல்களில் தவெக அரசு ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக எதிர்க்கட்சிகளை குறிவைத்து கைது நடவடிக்கைகளில் த.வெ.க அரசு ஈடுபட்டு வருவதற்கு, நீதிமன்றம் பலமுறை கண்டனம் தெரிவித்தும், இன்னும் திருந்தாமல் அதே செயலை செய்து வருகிறது. அதோடு மக்கள் தங்கள் உரிமைக்காக எழுப்பும் போராட்டத்தையும் அடக்க முயற்சித்து, அவர்கள் மீது த.வெ.க அரசின் போலீசார் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டின் பொருளாதார வீழ்ச்சி பற்றியும், விலையேற்றம் பற்றியும் அண்மையில் பிரபல பொருளாதார நிபுணரும், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) உதவிப் பேராசிரியருமான முனைவர் கலையரசன் பேசியிருந்தார். இவரது பேச்சை தொடர்ந்து நேற்று (அக்.28) அதிகாலை நேரத்தில் சீருடை இல்லாத போலீசார் கலையரசனை கைது செய்தனர்.

இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்னடங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி ”பேராசிரியரும் பொருளாதார அறிஞருமான கலையரசன் அவர்களை நேற்று அதிகாலையில் பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி அராஜகமான முறையில் கைது செய்து, அலைக்கழித்து, மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ள த.வெ.க அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்குப் பிரச்சினை என இந்த அரசின் நிர்வாகச் சீர்கேடுகளை விமர்சிக்கும் எவர் ஒருவரும் காவல்துறையின் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற மிரட்டலாகத்தான் இந்தக் கைது சம்பவம் இருக்கிறது.

அறிவுடைமையின் அருமை புரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில் கலைஞர்களும் கல்வியாளர்களும் வஞ்சிக்கப்படுவார்கள். தவெகவின் ஆட்சி அப்படியானதே” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories