தமிழ்நாடு

FIR இல்லை.. Uniform இல்லை.. அதிகாலையில் கைது செய்யப்பட்ட பொருளாதார நிபுணர் கலையரசன்.. காரணம் என்ன?

அதிகாலை நேரத்தில் பொருளாதார நிபுணர் கலையரசன் சீருடை அணியாத காவலர்களால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FIR இல்லை.. Uniform இல்லை.. அதிகாலையில் கைது செய்யப்பட்ட பொருளாதார நிபுணர் கலையரசன்.. காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, அரசின் சட்ட விரோத நடவடிக்கைகள், மக்கள் விரோத செயல்களை பற்றி விமர்சித்தால் அவர்கள் மீது வழக்கு பாய்வது வாடிக்கையாகி வருகிறது. பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் நோக்கில் பல செயல்களில் தவெக அரசு ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக எதிர்க்கட்சிகளை குறிவைத்து கைது நடவடிக்கைகளில் தவெக அரசு ஈடுபட்டு வருவதற்கு, நீதிமன்றம் பலமுறை கண்டனம் தெரிவித்தும், இன்னும் திருந்தாமல் அதே செயலை செய்து வருகிறது. அதோடு மக்கள் தங்கள் உரிமைக்காக எழுப்பும் போராட்டத்தையும் அடக்க முயற்சித்து, அவர்கள் மீது தவெக அரசின் போலீசார் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக விமர்சனங்களை சகித்து கொள்ள முடியாத அரசாகவே, தவெக அரசும், விஜயும் விளங்குகிறார்கள். அரசின் குறைகளை கூறினால், அவர்கள் மீது காவல்துறையை ஏவி, அவர்களை வாய் திறக்க விடாமல் செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பிரபல பொருளாதார நிபுணர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) உதவிப் பேராசிரியர் கலையரசன், தவெக அரசால் தமிழ்நாடு பொருளாதார வீழ்ச்சியில் செல்வதை அம்பலப்படுத்திய நிலையில், அவரை அதிகாலை நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

FIR இல்லை.. Uniform இல்லை.. அதிகாலையில் கைது செய்யப்பட்ட பொருளாதார நிபுணர் கலையரசன்.. காரணம் என்ன?

அதாவது, 'The Dravidian Model' என்ற ஆங்கில நூலின் ஆசிரியர்களில் ஒருவரான கலையரசன், தமிழ்நாட்டின் பொருளாதார நிபுணர்களில் பிரபலமாக ஒருவராக அறியப்பட்டவர். இந்த சூழலில் இவர் தனியார் சேனலுக்கு அண்மையில் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு குறித்து பேசியிருந்தார்.

மேலும் தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு அதிகமாக இருப்பதாகவும், இதைக் கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இது சற்று பேசுபொருளாக மாறிய நிலையில், நேற்று (அக்.28) அதிகாலை நேரத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதாவது அதிகாலை சுமார் 5 மணியளவில், சீருடையில் இல்லாத காவலர்கள் இவரது வீட்டுக்குள் புகுந்து இவரை கைது செய்துள்ளனர். இவர் குறித்த விவரங்களை இவரது உறவினர்களுக்கு கூட போலீசார் தெரிவிக்க விடாமல், அவரது செல்போனை பறித்துக்கொண்டுள்ளனர். தன் மீது என்ன வழக்கு என்று கேட்டதற்கு முறையாக பதிலளிக்காத பல்லாவரத்தை அடுத்த பம்மல் சங்கர் நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார், அவர் மீது FIR கூட பதியாமல் அழைத்து சென்றுள்ளனர்.

FIR இல்லை.. Uniform இல்லை.. அதிகாலையில் கைது செய்யப்பட்ட பொருளாதார நிபுணர் கலையரசன்.. காரணம் என்ன?

பின்னர் அவரிடம், பல்லாவரம் தொகுதி தவெக எம்எல்ஏ காமாட்சியின் இன்ஸ்டாகிராம் பதிவில் தகாத வார்த்தைகளால் கருத்து பதிவிட்டதாகக் கூறி விசாரித்துள்ளனர். இதையடுத்து இது தனது கணக்கு இல்லை என்றும், தனக்கு இன்ஸ்டாகிராம் கணக்கே கிடையாது என்றும், சம்பந்தப்பட்ட கருத்தைத் தான் பதிவிடவில்லை என்றும் கலையரசன் பதிலளித்தார்.

எனினும் அவரது பேச்சை கேட்காத போலீசார், அவரிடம் தொடர்ந்து மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் மீண்டும் தனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று மறுக்கவே, பின்னர் பல்லாவரம் அருகே சென்றபோது காரை சாலையோரம் நிறுத்திய போலீசார், உயர் அதிகாரிகளுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியுள்ளனர். பின்னர் கலையரசனை மீண்டும் அடையாறில் உள்ள வீட்டுக்கே அழைத்துச் சென்று விட்டுள்ளனர்.

கலையரசனை அழைத்துச் சென்றதற்குக் காரணமான இன்ஸ்டாகிராம் கணக்கில், அவரது போட்டோ பயன்படுத்தப்பட்டிருந்தாலும், கணக்கின் பெயர் விஜய மணிகண்டன் என இருந்தது. அந்தப் போட்டோ ஹார்வர்ட் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 5-ந் தேதி உருவாக்கப்பட்ட இந்த இன்ஸ்டா பக்கத்தில் 3 பதிவுகள் மட்டுமே போடப்பட்டுள்ளன.

Fake Account
Fake Account

பல்லாவரம் அருகே சென்றபோது காரை சாலையோரம் நிறுத்திய போலீசார், உயர் அதிகாரிகளுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியுள்ளனர். பின்னர் கலையரசனை மீண்டும் அடையாறில் உள்ள வீட்டுக்கே அழைத்துச் சென்று விட்டுள்ளனர்.

கலையரசனை அழைத்துச் சென்றதற்குக் காரணமான இன்ஸ்டாகிராம் கணக்கில், அவரது போட்டோ பயன்படுத்தப்பட்டிருந்தாலும், கணக்கின் பெயர் விஜய மணிகண்டன் என இருந்தது. அந்தப் போட்டோ ஹார்வர்ட் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 5-ந் தேதி உருவாக்கப்பட்ட இந்த இன்ஸ்டா பக்கத்தில் 3 பதிவுகள் மட்டுமே போடப்பட்டுள்ளன.

இந்த இன்ஸ்டா கணக்குக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கலையரசனிடம் போலீசார் கடிதம் எழுதியும் வாங்கியுள்ளனர். இந்த நிகழ்வால் தற்போது கலையரசன் பெருமளவு மன உளைச்சலில் உள்ளார். மேலும் இந்த நிகழ்வுக்கு எதிர்க்கட்சியினர், மக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories