
திராவிட இயக்கக் கொள்கை ஆசானும், ‘முரசொலி’ நாளிதழின் 35 ஆண்டுகால ஆசிரியருமான முரசொலி செல்வம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் முரசொலி செல்வத்தின் திருவுருவச் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டுள்ள முரசொலி செல்வத்தின் திருவுருவப் படத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர்ச் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ”இடைத்தேர்தல் முடிவு குறித்து நேற்றே விரிவான அறிக்கை கொடுத்து இருக்கிறேன்.
இருந்தாலும் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் தி.மு.க-வுக்குத் தோல்வியில் வெற்றி; த.வெ.க-வுக்கு வெற்றியில் தோல்வி" எனத் தெரிவித்தார்.






