விளையாட்டு

LIST A கிரிக்கெட்டில் சூர்யவன்ஷியின் இரட்டைச் சதம்.. உள்ளங்கையில் உலக சாதனைகள்! : முழு விவரம் உள்ளே!

2026 ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில் 53 பந்துகளில் 204 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி.

LIST A கிரிக்கெட்டில் சூர்யவன்ஷியின் இரட்டைச் சதம்.. உள்ளங்கையில் உலக சாதனைகள்! : முழு விவரம் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

2026 ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி இன்று (நவ.24) நடைபெற்றது.

இந்தப்போட்டியில் முதலில் களமிறங்கிய UAE அணி 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து 250 ரன்களுடன் களமிறங்கிய இந்திய அணி 14.2 ஓவர்களில் இலக்கை எட்டி அதிரடி காட்டியது.

இதில் இந்தியா ஏ அணிக்காக களமிறங்கிய இளம் வீரர் சூர்யவன்ஷி, 53 பந்துகளில் 7 பவுண்டரிகள் 28 சிக்ஸர்களுடன் 204 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் மற்றும் இரட்டை சதம் உள்ளிட்ட சாதனைகளை அவர் முறியடித்துள்ளார்.

15 வயதான சூர்யவன்ஷி, 28 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்து, 29 பந்துகளில் அதிவேக சதமடித்த ஆஸ்திரேலிய வீரர் ஜேக் ஃப்ரேசர் - மெக்கர்க்கின் சாதனையை முறியடித்துள்ளார்.

சதமடித்தும் தொடர்ந்து அதிரடி காட்டிய சூர்யவன்ஷி, அடுத்த 100 ரன்களை வெறும் 24 பந்துகளில் அடித்து ஐக்கிய அரபு அமீரக பந்துவீச்சாளர்களை தடுமாறச் செய்தார்.

52 பந்துகளில் இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்த சூர்யவன்ஷி, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 103 பந்துகளில் அதிவேக இரட்டை சதமடித்த நியூசிலாந்து வீரர் சாட் போவ்ஸின் சாதனையை முறியடித்தார்.

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 16 இன்னிங்ஸ் மட்டுமே விளையாடியுள்ள சூர்யவன்ஷி, இந்த ஃபார்மட்டில் 4 புதிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

LIST A கிரிக்கெட்டில் சூர்யவன்ஷியின் இரட்டைச் சதம்.. உள்ளங்கையில் உலக சாதனைகள்! : முழு விவரம் உள்ளே!

அதன்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிராக 11 பந்துகளில் அரைசதமடித்து மிரட்டினார்.

இன்றைய போட்டியில், அதிவேக சதம் (28 பந்துகள்), அதிவேக இரட்டை சதம் (52 பந்துகள்) ஆகிய இரட்டை சாதனைகளை அவர் படைத்துள்ளார்.மேலும், 40 பந்துகளில் 150 ரன்கள் குவித்து, தனது முந்தையை சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் 59 பந்துகளில் அவர் 150 ரன்களை கடந்திருந்தார்.

இன்றைய ஆட்டத்தில் 28 சிக்ஸர்களை விளாசிய சூர்யவன்ஷி, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.

முன்னதாக, 2018-ல் குயின்ஸ்லாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா வீரர் டார்சி ஷார்ட் 23 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையையும் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.

முன்னதாக 2013-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவும், 2022 விஜய் ஹசாரே கோப்பையில் உத்தரப் பிரதேசத்திற்கு எதிராக ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் 16 சிக்ஸர்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.

இளம் வீரராக உள்ள சூர்யவன்ஷி தொடர்ந்து ஜொலித்து வரும் நிலையில், பல்வேறு வீரர்களும் இவரின் இந்தச் சாதனைகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories