தமிழ்நாடு

“பா.ஜ.க அரசின் நீட்சி த.வெ.க” : CJP-க்கு ஆதரவாகப் போராடிய இளைஞர்கள் கைது - மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி, சென்னையில் போராடிய இளைஞர்களைத் த.வெ.க அரசு கைது செய்ததற்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“பா.ஜ.க அரசின் நீட்சி த.வெ.க” : CJP-க்கு ஆதரவாகப் போராடிய இளைஞர்கள் கைது - மு.க.ஸ்டாலின் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

SIR மூலமாக நடந்துள்ள தேர்தல் முறைகேட்டைக் கண்டித்தும், இதற்குப் காரணமாக இருந்த தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரியும் இன்று டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) போராட்டம் அறிவித்திருந்தது.

இதையடுத்து இன்று காலை விடிந்ததும் இளைஞர்கள், மாணவர்கள் எனப் பலரும் டெல்லியை நோக்கி வரத்தொடங்கினர். இந்த போராட்டத்தை முடக்குவதற்காக ஒன்றிய பா.ஜ.க அரசு ஏற்கனவே மெட்ரோ ரயில் நிலையங்களை மூடியது. மேலும் இணையத்தையும் துண்டித்தது. இருந்தும் இன்று மாணவர்கள் டெல்லியில் குவியத் தொடங்கினர்.

இந்த போராட்டத்தைக் கண்டு அஞ்சிய ஒன்றிய அரசு 25,000-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் இராணுவத்தைக் குவித்துள்ளது. மேலும் நாடாளுமன்றம் நோக்கி வரும் இளைஞர்களை வலுக்கட்டாயமாகத் கைது செய்து வருகிறது.

அதேபோல், கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாகச் சென்னையில் போராட்டம் நடத்திய இளைஞர்களைத் த.வெ.க அரசு குண்டுகட்டாகக் கைது செய்துள்ளது. டெல்லியில் பா.ஜ.க எப்படி இளைஞர்களைப் போராடவிடாமல் கைது செய்து வருகிறதோ, அதேபோல் த.வெ.க அரசும் போராடும் இளைஞர்களைக் கைது செய்துள்ளது.

இந்நிலையில், தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரி, சென்னையில் போராடிய இளைஞர்களை த.வெ.க அரசு கைது செய்ததற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ”"இன்று டெல்லியில் நடக்கும் சம்பவங்களும், அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறைகளும், நான் வாழ்ந்த அவசரநிலை காலத்தின் வலிமிகுந்த நினைவுகளை மீண்டும் கொண்டு வருகின்றன.

டெல்லியிலும், நாடு முழுவதிலும் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து அரசியல் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

பாஜக அரசின் நீட்சியாகச் செயல்பட்டு, போராடும் மாணவர்களுக்கு எதிராகப் போலீஸ் ஒடுக்குமுறையை ஏவியுள்ள தமிழ்நாட்டின் த.வெ.க அரசை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அமைதியான முறையில் தங்களின் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்திப் போராடும் இளைஞர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். எதிர்ப்புக் குரல் எழுப்புவது குற்றமல்ல; அதைப் பாதுகாப்பவர்களின் குரலை ஒடுக்குவதன் மூலம் ஜனநாயகம் பிழைக்க முடியாது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமா என்பதில் எந்த சமரசமும் இல்லை. அவரது ராஜினாமாவைத் தாண்டி, தேர்தல் ஆணையத்தின் கட்டமைப்புக்கு ஏற்படுத்தப்பட்ட அனைத்து பாதிப்புகளும் சரிசெய்யப்பட வேண்டும்; அதன் சுதந்திரமும் நேர்மையும் மீண்டும் மீட்டெடுக்கப்பட வேண்டும்." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories