தமிழ்நாடு

தொடர் அட்ராசிட்டி... கிராம சபைக் கூட்டத்தை நடத்திய தவெக நிர்வாகிகள்.. சேலத்தில் அதிர்ச்சி! | VIDEO

சேலம் அருகே கிராம சபை கூட்டத்தை தவெக நிர்வாகிகளே நடத்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் அட்ராசிட்டி... கிராம சபைக் கூட்டத்தை நடத்திய தவெக நிர்வாகிகள்.. சேலத்தில் அதிர்ச்சி! | VIDEO
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டமும், மரபும் மீறப்பட்டு வருவது வழக்கமாகி வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதோடு, பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாகி வருகிறது. இதையெல்லாம் சரி செய்யாத தவெக அரசு, எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவதையும், ரீல்ஸ் போடுவதையும் மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளது.

தலைவன் எவ்வழியோ, தொண்டனும் அவ்வழியே... என்பதற்கு ஏற்ப, தவெக-வை சேர்ந்த நிர்வாகிகளும் ரீல்ஸ் வெளியிடுவதிலேயே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளனர். கற்க வேண்டிய இடத்தில் சினிமா பாடலை பாட சொல்வதும், அரசு பள்ளிகளில் புகுந்து ரீல்ஸ் வெளியிடுவதும் அரசு நிறுவனங்களில் புகுந்து ஆய்வு என்ற பெயரில் மிரட்டுவதும், ரீல்ஸ் வெளியிடுவதையும் மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

தொடர் அட்ராசிட்டி... கிராம சபைக் கூட்டத்தை நடத்திய தவெக நிர்வாகிகள்.. சேலத்தில் அதிர்ச்சி! | VIDEO

மேலும் அவ்வாறு செய்யும் அவர்கள், அரசு அதிகாரிகளின் பணியில் தலையிடுவதும், அதற்கு கண்டனங்கள் குவித்தாலும் திருந்தியபாடில்லை என்பது போலே ஒவ்வொரு நிகழ்வும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், சேலம் அருகே கிராம சபை கூட்டத்தை தவெக நிர்வாகிகளே நடத்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஒவ்வொரு முறையும் காந்தி ஜெயந்தி அன்று கிராமங்கள் தோறும் கிராம சபைக் கூட்டம் நடப்பது வழக்கம். இந்த கூட்டத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான கிராம ஊராட்சி மன்றத் தலைவர் (Panchayat President) முன்னின்று நடத்துவது வழக்கம்.

தொடர் அட்ராசிட்டி... கிராம சபைக் கூட்டத்தை நடத்திய தவெக நிர்வாகிகள்.. சேலத்தில் அதிர்ச்சி! | VIDEO

இந்த சூழலில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட அமரகுந்தி ஊராட்சியில் காந்தி ஜெயந்தி ஒட்டி நேற்று (அக்.02) நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை, தவெக தாரமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சிவசக்தி என்பவர் நடத்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு கட்சியின் ஒன்றிய செயலாளர், கிராம சபை கூட்டத்தை முன் நின்று நடத்தியது மட்டுமல்லாமல், பொதுமக்கள் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கும் கோரிக்கைகளுக்கும் அதிகாரிகளுக்கு பதிலாக தவெக ஒன்றிய செயலாளரே பதில் அளித்தார். பதில் அளித்ததோடு நிற்காமல், பதில் தெரியாதபோதும், அரசின் குறைகளை சொல்லி மக்கள் கேள்வி எழுப்பியபோதும் மக்களை மிரட்டம் தொனியில் அவர் பேசியது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர் அட்ராசிட்டி... கிராம சபைக் கூட்டத்தை நடத்திய தவெக நிர்வாகிகள்.. சேலத்தில் அதிர்ச்சி! | VIDEO

தவெக ஒன்றிய செயலாளரின் இந்த நடவடிக்கை தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. மக்கள் பிரதிநிதி அல்லாதவர்கள் கிராம சபை கூட்டத்தை நடத்த அனுமதித்த அதிகாரிகள் மீது புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் விதிமுறைகளை மீறி மக்கள் பிரதிநிதி அல்லாதவர்கள் கிராம சபை கூட்டம் நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்திட கோரிக்கை எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories