தமிழ்நாடு

முடங்கியுள்ள பொருளாதாரம் ; த.வெ.க அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? - தங்கம் தென்னரசு கேள்வி!

தமிழ்நாட்டின் நிதி நிலைமை, இன்று தொடர்ந்து மூன்று மாதங்களாகக் குறைந்து, -5% வரை சரிவைச் சந்தித்திருப்பது வேதனையளிக்கிறது.

முடங்கியுள்ள பொருளாதாரம் ; த.வெ.க அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? - தங்கம் தென்னரசு கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிட மாடல் ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக உயர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்தது. ஆனால், த.வெ.க அரசு ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் கணிசமாகக் குறைந்து வருகிறது.

ஆனால், இதுபற்றி எல்லாம் கவலைப்படாமல், முதலமைச்சர் விஜய், சினிமாவில் நடிப்பதுபோல் முதலமைச்சராக நடித்துக் கொண்டிருக்கிறார். விண்ணை முட்டும் அளவிற்கு மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் அவர் இருந்து வருகிறார்.

இந்நிலையில், "பொருளாதாரத்தை முடக்கியுள்ள இந்தச் சீர்கேட்டிற்கு ஆளும் அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?" என த.வெ.க அரசுக்கு முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ”தி.மு.க ஆட்சிக் காலத்தில் நாட்டின் பிற மாநிலங்களை விஞ்சி, இரட்டை இலக்க வளர்ச்சியோடு ஜி.எஸ்.டி வசூலில் சாதனை படைத்த தமிழ்நாட்டின் நிதி நிலைமை, இன்று தொடர்ந்து மூன்று மாதங்களாகக் குறைந்து, -5% வரை சரிவைச் சந்தித்திருப்பது வேதனையளிக்கிறது.

நாட்டின் பிற மாநிலங்கள் தொடர் தொழில் வளர்ச்சியைக் காணும்போது, தமிழ்நாட்டில் மட்டும் உற்பத்தி முடங்கி, நுகர்வு சுருங்கி வருவது நிர்வாகக் கோளாறின் வெளிப்படையான அடையாளம்.

தொழில் முதலீடுகளையும் நிதி மேலாண்மையையும் தொலைநோக்குப் பார்வையோடு கையாண்ட திராவிட மாடல் ஆட்சியின் வழிகாட்டுதல் இன்றி, பொருளாதாரத்தை முடக்கியுள்ள இந்த சீர்கேட்டிற்கு ஆளும் அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories