தமிழ்நாடு

மாணவிக்கு பாலியல் தொல்லை : இதுதான் பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் லட்சணமா? - DMK IT Wing கேள்வி!

கொஞ்சம் கூட வெட்கம், சூடு, சொரணை இல்லையா முதலமைச்சர் விஜய் அவர்களே?

மாணவிக்கு பாலியல் தொல்லை  : இதுதான் பெண்களுக்கும்  பாதுகாப்பு கொடுக்கும் லட்சணமா? - DMK IT Wing கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கண்டிகை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு என்ன நடந்தது என்பது குறித்து பள்ளி நிர்வாகமோ அல்லது காவல்துறையினரோ முறையான விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இன்று காலை வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள கண்டிகை சந்திப்பில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதுதான் பெண்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் லட்சணமா? என தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் "அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை நடந்த கொடூரத்தை உறுதிப்படுத்தியுள்ளார்; ஆனால், காவல்துறை இந்த செய்தியைப் பொய் என்று சொல்கிறது.

விஜய்யின் காவல்துறை யாரைக் காப்பாற்றப் பார்க்கிறது? இது யாருக்கான காவல்துறை? பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திடமிருந்து மொபைல் போன் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து மிரட்டும் தொணியில் பேசியுள்ளது.

இதுதான் பெண்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் லட்சணமா? கொஞ்சம் கூட வெட்கம், சூடு, சொரணை இல்லையா முதலமைச்சர் விஜய் அவர்களே?

இப்படித்தான் நடத்துமா உங்கள் காவல்துறை? இந்த விஷயத்தை மூடிமறைக்க இந்த அரசு ஏன் முயல்கிறது? இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் ?” என கேள்வி எழுப்பியுள்ளது.

banner

Related Stories

Related Stories