
கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு 122 ஆண்டுகளாக இயங்கி வரும் நிறுவனம் தான் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனம் (Kumbakonam Mutual Benefit Fund Nidhi Limited - KMBF). பாரம்பரியமிக்க இந்த நிறுவனம் சுமார் 12 லட்சம் பொதுமக்களின் முதலீடுகளைப் பங்குகளாகக் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. மேலும் பல நூறு கிளைகள் கொண்ட இந்த நிதி நிறுவனத்தை கம்பெனி சட்டப்படி பங்குதாரர்கள் நிர்வகித்து வருகின்றனர்.
இந்த நிறுவனத்தின் தலைவராக திமுக மாநிலங்களவை எம்.பி. கல்யாணசுந்தரம் பதவி வகித்து வந்தார். அதோடு இன்னப்பிற பதவிகளிலும் திமுகவினரே இருந்தனர். ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின்போதும், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே இந்த நிறுவனத்தின் தேர்தலில் வெற்றி பெற்று பதவி வகிப்பர்.

இந்த நிலையில், தவெக ஆட்சி அமைந்த பிறகு அக்கட்சி நிர்வாகிகள் நிர்வாகப் பதவிகளுக்கு வருவதற்கு தீவிரமாக முனைப்புக் காட்டியுள்ளனர். இப்படியான சூழலில் 1904-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிதி நிறுவனத்தின் இயக்குநர் குழுத் தேர்தல், அண்மையில் ஒன்றிய அரசின் நிதி நிர்வாகங்கள் முறைப்படி, இ-ஓட்டிங் (e-voting) முறையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் இந்த நிதி நிறுவனத்தின் தலைவர் கல்யாணசுந்தரம், இயக்குநர் முன்னாள் திமுக எம்.எல்.ஏ அன்பழகன், நிர்வாக இயக்குநர் வேலப்பன், கூடுதல் இயக்குநர் ரவிசந்திரன் ஆகிய 4 பேரின் பதவிக்காலம் முடிந்து விட்டதால் கடந்த செப்.27 முதல் 30-ம் தேதி வரை இ-ஓட்டிங் முறையில் தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய தலைவரான திமுக எம்.பி. எஸ். கல்யாணசுந்தரம் தலைமையிலான தரப்பு மற்றும் தவெக ஆதரவு தரப்பினரிடையே கடும் போட்டி நிலவியது.

இந்த சூழலில், இந்தத் தேர்தலில் மீண்டும் கல்யாணசுந்தரம், வேலப்பன், சாக்கோட்டை அன்பழன், ரவிச்சந்திரன் ஆகியோர் சுமார் 48 லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்று நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களை எதிர்த்து தவெக சார்பில் போட்டியிட்ட மாநகர செயலர் முருகானந்தம், மாவட்ட பொருளாளர் விஜய்சந்திரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அஞ்சனா, ஸ்ரீதேவி, மாணவரணி மாநகர தலைவர் சந்தேஷ் உள்ளிட்டோர் இ–ஓட்டிங் முறைக்கு விண்ணப்பிக்காமல், அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பித்ததால், விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து இந்த தேர்தலில் தோல்விடைந்தததை பொறுக்க முடியாத தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினர், அத்திமீறி நிதி நிறுவனத்தில் புகுந்து கலவரம் மேற்கொண்டனர். தகவலறிந்த போலீஸார் கலவரம் மேற்கொண்ட ஆளுங்கட்சியினர் மீது வழக்குபதியாத தவெக அரசின் போலீசார், ஒரு தவெக அமைச்சரின் தூண்டுதலின்பேரில் நிதி நிறுவன தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தவெக அரசின் இந்த அராஜகத்திற்கு தொடர்ந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது. ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அராஜகங்களில் தவெக-வினர் ஈடுபட்டு வரும் நிலையில், இப்போது பொதுமக்களின் முதலீடுகளைக் கொண்டு இயங்கி வரும் நிதி நிறுவன சொத்தை அபகரிக்கும் நோக்கில் தனது அதிகார திமிரை காட்டி வரும் தவெக-வுக்கு பொதுமக்கள் தங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.






