தமிழ்நாடு

சமூகநீதி நாளில் சமூக அநீதி : மாணவர் பாரதிதாசனுக்கு நெருக்கடி தருவது கேவலத்தின் உச்சம் - உதயநிதி ஆவேசம்!

மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது.

சமூகநீதி நாளில் சமூக அநீதி : மாணவர் பாரதிதாசனுக்கு நெருக்கடி  தருவது கேவலத்தின் உச்சம் - உதயநிதி ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசின், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை கிடைக்காததால் தனது கல்வி முற்றிலும் பாதிக்கும் சூழல் உறுவாகியுள்ளதாக மலேசியா ஆய்வு மாணவர் பாரதிதாசன் கண்ணீருடன் மீண்டும் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், ”எல்லா தகவலையும் கொடுத்த பிறகும், மீண்டும் முதலில் இருந்து தரவுகளை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். என் மீது பேராசிரியர்கள் வைத்திருந்த நம்பகத்தன்மையை நீங்கள் நாசமாக்கிவிட்டீர்கள். கல்லூரியிலிருந்து என்னை நீக்கப் போகிறார்கள். என்னுடைய ஆய்வையும் நான் சமர்ப்பிக்க முடியாமலாகிவிட்டது. உங்களிடம் இருக்கும் அதிகாரம் அனைத்தையும் என் மீது ‘target' செய்து என்னை ஒடுக்க நினைக்கிறீர்கள்.

’ஏன் உனக்கு ஆய்வுபடிப்பு... நீ அடிமையாதானே இருந்தே...? நீ அப்படியே இரு!’ என்று நேரடியாக சொல்லி விடுங்கள். மன உளைச்சலை தராதீர்கள். ரோகித் வெமுலாவை ஒன்றிய அமைச்சகம் என்ன செய்ததோ அதைத்தான் இன்று உங்களின் அமைச்சகமும் எனக்கு செய்கிறது. அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள்” என வோதனையுடன் கூறியுள்ளார்.

இந்நிலையில், ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது என த.வெ.க அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் SofaModel அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவலத்தின் உச்சம்.மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது.

ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது. அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும் - அவரது ஆராய்ச்சி படிப்பு தொடரவும் இந்த Reels அரசு துணை நிற்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories